மேலும் அறிய
Advertisement
நில மோசடி வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் அன்னபிரகாஷுக்கு மதுரை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்
திருவண்ணாமலையில் 30 நாட்கள் தங்கியிருந்து, நாள் தோறும் காலை கையெழுத்து இட வேண்டும் என நிபந்தனை விதிப்பு
தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா பகுதியில் 182 ஏக்கர் அரசு நிலத்தை அதிகாரிகள் துணையுடன் பலருக்கு முறைகேடாக பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க.வினர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் கைதான அ.தி.மு.க. பிரமுகர் அன்னபிரகாஷ், தனக்கு ஜாமீன் கோரி ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது.
இந்த நிலையில் மீண்டும் ஜாமீன் மனுவை அவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், மனுதாரருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு போதிய சிகிச்சை பெற முடியாமல் சிறையில் அவதிப்படுகிறார். இதை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். அரசு தரப்பில், தேவைப்பட்டால் மனுதாரருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனை அடுத்து நீதிபதி, மனுதாரருக்கு நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் திருவண்ணாமலையில் 30 நாட்கள் தங்கியிருந்து, நாள் தோறும் காலை கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் வசமுள்ள தினசரி மார்க்கெட், வார மார்க்கெட், பூ மார்க்கெட்களை நகராட்சி வசம் ஒப்படைக்குமாறு உத்தரவிட கோரிய வழக்க்கு - மதுரை மாவட்ட ஆட்சியர் பதில் தர உத்தரவு
உசிலம்பட்டி நகராட்சி 4வது வார்டு கவுன்சிலர் வீரமணி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "உசிலம்பட்டி நகராட்சியில் நிதி நெருக்கடி உள்ளது. நகராட்சி ஆவதற்கு முன் ஒட்டுமொத்த பகுதியும் ஊராட்சி ஒன்றியமாக இருந்தது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதியிலுள்ள அரசு நிலங்கள் இதுவரை நகராட்சியிடம் ஒப்படைக்கப்படவில்லை. இதனால், நகராட்சிக்கு போதுமான வருமானம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தினசரி மார்க்கெட், வார மார்க்கெட் மற்றும் பூ மார்க்கெட் ஆகியவை நகராட்சி வசம் ஒப்படைக்குமாறு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வு, மதுரை ஆட்சியர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
கல்வி
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion