மேலும் அறிய
Advertisement
Madurai Hc: கொலை வழக்கு தொடர்பான ஜாமீன் கேட்ட பெண் இன்ஸ்பெக்டர்; நிலுவை வழக்கு விசாரித்த பின்னரே ஜாமீன் வழங்க முடிவு
பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள போலீஸ் அதிகாரி மீது ஒரு கொலை வழக்கு வந்தபின் வேறு வழக்குகள் இருப்பது தெரிய வருகிறது - நீதிபதி வேதனை
மனுதாரர் மீது நிலுவையில் உள்ள வழக்குகளின் ஆவணங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. நிலுவையில் உள்ள வழக்குகளின் ஆவணங்களை பார்த்த பின்பே மனதாரருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து முடிவெடுக்க முடியும் - நீதிபதி
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவாகரத்தில் காவல் ஆய்வாளர் சத்தியசீலா தனக்கு ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தார்.
பெண் இன்ஸ்பெக்டர் சத்தியசீலா மனு
மதுரை மாவட்டம் நெடுங்குளத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் சத்தியசீலா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கோரி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்," ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 22 -ம் தேதி நடைபெற்றது. அப்போது ராமர் என்பவரை முன்விரோதம் காரணமாக சிலர் தாக்கினர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக என் மீதும் புகார் எழுந்துள்ளது. முதல் தகவல் அறிக்கையில் எனது பெயர் இடம்பெறாத நிலையில், என் மீது வேண்டுமென்றே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கது அல்ல. மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜான வழக்கறிஞர், ஆய்வாளர் சத்தியசீலா மீது 2 வழக்குகள் நிலுவை உள்ளது என வாதிடப்பட்டது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்: முதல் தகவல் அறிக்கையில் மனுதாரரின் பெயர் இல்லாத நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.
நீதிபதிகள்
அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “மனுதாரர் மீது 2 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், வழக்கு சம்பந்தமான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்திரவிட்டு, அதனை ஆராய்ந்த பின்பு மனுதாரருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து உத்தரவிட முடியும் என கூறிய நீதிபதி. வழக்கு விசாரணை ஜூன் 18-ம் தேதி தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Bakrid : பக்ரீத் பண்டிகையின்போது ஆடு மாடுகளை வெட்டி பலியிட தடைவிதிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்பு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Crime: ரீல்ஸ் மூலம் ஆண் நண்பருடன் பழக்கம்! கொலை வழக்கில் சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர் கைது - என்ன நடந்தது?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion