மேலும் அறிய

Madurai High Court: செஸ் ஒலிம்பியாட் விளம்பரம்; ஜனாதிபதி, பிரதமர் படங்கள் அவசியம் - நீதிமன்றம் அதிரடி

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர் படங்கள் இடம்பெற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் விளம்பரங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் புகைப்படங்கள் இடம் பெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கையைச் சேர்ந்த ராஜேஷ்குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பிரதமரின் படம் இடம்பெறவில்லை என்பதை குறிப்பிட்டு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் புகைப்படத்துடன் வைக்கப்படும் விளம்பரங்கள் சேதப்படுத்தப்பட்டாலோ, ஏதேனும் இடையூறு ஏற்பட்டாலோ அதில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

சிவகங்கையைச் சேர்ந்த ராஜேஷ்குமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழகத்தில் சென்னை மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்க உள்ளது. பிரதமர் மோடி இந்த போட்டிகளை தொடங்கி வைக்க உள்ளார். ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ள இந்த போட்டியின் விளம்பரத்திற்காக பெருமளவிலான பொதுமக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற, நாட்டிற்கு பெருமை சேர்க்கக்கூடிய நிகழ்வு இது. ஆனால், தமிழக அரசு தங்களுக்கான அரசியல் ஆதாயம் தேடும் நிகழ்வாக பயன்படுத்திக் கொண்டது. இதற்காக இந்நிகழ்விற்கான விளம்பரங்களில், இந்திய குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமரின் புகைப்படங்களை தவிர்த்து முதல்வரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறச் செய்யப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது. ஆகவே, " 44ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் பெயர் மற்றும் புகைப்படத்தை சேர்க்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆனந்தி அமர்வு, விசாரித்து தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது. 

இந்நிலையில், தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், "தமிழக அரசு தரப்பில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடந்த காரணத்தால் குடியரசுத் தலைவர் புகைப்படத்தை விளம்பரங்களில் பயன்படுத்தவில்லை. பிரதமர் விழாவைத் தொடங்கி வைப்பது 22ஆம் தேதியே உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றைய நாளிதழ்களில் அவரது புகைப்படம் இடம் பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. அதோடு இதில் எவ்விதமான உள்நோக்கமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றம் ஏற்கனவே  சர்வதேச அளவில் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் தமிழக அரசின் விளக்கங்கள் ஏற்கத்தக்கவை அல்ல.

செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் பிரதமரின் புகைப்படம் இல்லை என தெரிய வருகிறது. ஆகவே பத்திரிக்கை மற்றும் காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பாகும் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் புகைப்படங்கள் இடம் பெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
மனுதாரர் தரப்பில் தமிழக அரசு பொதுமக்களின் வரிப்பணத்தில் விளம்பரம் செய்தால் அவர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என கேட்கப்பட்டது.

 பொது மக்களின் உணர்வுகளை மதிப்பதும், சர்வதேச அளவில் நடைபெறும் நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி அழியாத முத்திரையை பெற்றுத் தருவதும் ஒருங்கிணைப்பாளர்களில் சிறந்த மன்னிப்பா அமையும்.

குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் புகைப்படத்துடன் வைக்கப்படும் விளம்பரங்கள் சேதப்படுத்தப்பட்டாலோ, ஏதேனும் இடையூறு ஏற்பட்டாலோ அதில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: சுத்து போட்ட கருமேகங்கள், தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: சுத்து போட்ட கருமேகங்கள், தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை வானிலை மையம் அறிக்கை
Rasipalan November 23: தனுசுக்கு வெற்றிதான்; மகரம் நிதானமா இருங்க.! உங்கள் ராசிபலன்?
Rasipalan November 23: தனுசுக்கு வெற்றிதான்; மகரம் நிதானமா இருங்க.! உங்கள் ராசிபலன்?
"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்கடுப்பேற்றிய நிர்வாகிகள்! கிளம்பிய தமிழிசை,வானதி! ஆபரேஷன் அதிமுகSathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: சுத்து போட்ட கருமேகங்கள், தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: சுத்து போட்ட கருமேகங்கள், தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை வானிலை மையம் அறிக்கை
Rasipalan November 23: தனுசுக்கு வெற்றிதான்; மகரம் நிதானமா இருங்க.! உங்கள் ராசிபலன்?
Rasipalan November 23: தனுசுக்கு வெற்றிதான்; மகரம் நிதானமா இருங்க.! உங்கள் ராசிபலன்?
"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை..  டிராபிக் குறையுமா?
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை.. செம்ம அப்டேட்டா இருக்கே!
நான் சொல்வதை கேளுங்க! விஜய்க்கு புரட்சித்தலைவரின் குணம்! - செல்லூர் ராஜு
நான் சொல்வதை கேளுங்க! விஜய்க்கு புரட்சித்தலைவரின் குணம்! - செல்லூர் ராஜு
Embed widget