மேலும் அறிய
மதுரையில் திமுக நிர்வாகி ஐடி நிறுவனத்தில் GST தொடர் சோதனை
ஐடி நிறுவன ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்ட பின்னர், ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் ஊழியர்களை நள்ளிரவுக்குப்பின் அனுப்பி வைத்தனர்.

சோதனை நடைபெறும் நிறுவனம்
Source : whats app
மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் இரண்டாவது நாளாக GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐடி நிறுவனத்தில் GST வரி ஏய்ப்பு
மதுரை தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி அமைப்புச் செயலாளர் கிருத்திகா தங்கபாண்டியன். இவருக்கு சொந்தமான ஆசிஸ் என்ற ஐடி நிறுவனம் தனக்கன்குளம் பகுதியில் இயங்கி வருகிறது. இந்த ஐடி நிறுவனத்தில் GST வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக, வந்த புகாரின் அடிப்படையில் GST நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இதில் ஆவணங்களை கைப்பற்றி நேற்று காலை முதல் சோதனை தொடங்கியது. உரிமையாளர்கள் தங்கப்பாண்டி, கிருத்திகா தங்கப்பாண்டி இருவரும் அதிகாரிகள் வருவதை அறிந்து ஒத்துழைப்பு வழங்கினர். ஐடி நிறுவன ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்ட பின்னர், ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் ஊழியர்களை நள்ளிரவுக்குப்பின் அனுப்பி வைத்தனர்.
இரண்டாவது நாள் சோதனை நடைபெற்று வருகிறது
மதுரை தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கிருத்திகாவுக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் ஜிஎஸ்டி நுண்ணறிவு அதிகாரிகள் நேற்று 14 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தப்பட்டது. இந்த நாளில் இன்றைய இரண்டாவது நாள் சோதனை நடைபெற்று வருகிறது. உரிமையாளர் கிருத்திகா நிறுவனத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் இரண்டாவது நாளாக GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்துவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















