மேலும் அறிய

Madurai: "20 கோடி கிடைக்கும்" - சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் ரூ.18 லட்சம் மோசடி!

சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் இரிடியம் கலசத்தில் முதலீடு செய்தால் 20 கோடி கிடைக்கும், என  மதுரையை சேர்ந்த வியாபாரியிடம் 18லட்சம் ரூபாய் மோசடி - திமுக நிர்வாகி உள்ளிட்ட இருவர் மீது வழக்குப்பதிவு.

தமிழகம் முழுவதும் உள்ள பல நபர்களிடம் கோடிக்கணக்கில் மோசடியா? விசாரணையை தீவிரப்படுத்த காவல்துறை திட்டம்.
 
இரிடியம் தொடர்பாக ஆசை வார்த்தை
 
மதுரை மாநகர் தெற்குவாசல் பகுதியை சேர்ந்த தெய்வேந்திரன் என்பவர் பர்னிச்சர் கடை வைத்து நடத்திவருகிறார். இவருக்கு தனது கடை அருகே இருந்த  கலைச்செல்வி என்ற பெண் தொழில்ரீதியாக அறிமுகமாகியுள்ளார். இதனைத்தொடர்ந்து தெய்வேந்திரனிடம் இரிடியம் கலந்த கலசத்தில் முதலீடு செய்தால் பல கோடி ரூபாய் வரை லாபம் கிடைக்கும் என அடிக்கடி தெய்வேந்திரனிடம் ஆசை வார்த்தை கூறிவந்துள்ளார். ஆனாலும் தெய்வேந்திரன் கலைச்செல்வியின் பேச்சை முழுமையாக நம்பாத நிலையில் ”திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த திமுக நிர்வாகியான முகமது ரபி பேசுகிறார்”- எனக் கூறி செல்போன் மூலமாக பேச வைத்துள்ளார். செல்போன பேசிய முகமது ரபியும் இரிடியம் கலசத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என தொடர்ந்து கூறிவந்துள்ளார். இதனையடுத்து சில மாதங்களுக்கு முன்பு மதுரைக்கு வந்தருந்த முகமது ரபியை நேரில் சந்தித்த தெய்வேந்திரன் ரபியிடம் 3 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை கொடுத்துள்ளார்.
 
இரிடிய டீல் மீட்டிங்
 
இதனையடுத்தும் சில நாட்கள் பிறகு மீண்டும் தெய்வேந்திரனை தொடர்பு கொண்டு ரபி பணம் கேட்டுள்ளார். இதனால் ஆன்லைன் மூலம் முகமது ரபிக்கு 2 லட்சம் ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் சென்னையில் இரிடிய டீல் மீட்டிங் இருக்கிறது என கூறி சென்னைக்கு அழைத்துச் சென்று அங்குள்ள பிரமாண்டமான தங்குவிடுதியில் தங்கவைத்து, தெய்வேந்திரனிடம் இருந்து ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுக்கொண்டுள்ளனர். தங்குவிடுதியில் நடைபெற்ற மீட்டிங்கில் மதுரையில் இருந்து தெய்வேந்திரன் சென்றபோது பல மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான நபர்கள் வந்துள்ளனர். அப்போது மீட்டிங்கில் பேசிய ரபி உள்ளிட்ட சில நபர்கள்  மீட்டிங்கில் கலந்துகொண்ட அனைவரும் இன்னும் சில நாட்களில் மும்பைக்கு  சென்று அங்கு பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என நைசாக ஆசைவார்த்தை கூறி பேசியுள்ளனர்.
 
நம்பிக்கை மோசடி
 
அப்போது மதுரையை சேர்ந்த தெய்வேந்திரனிடம் பேசிய  கலைச்செல்வி உங்களுக்கான 20 கோடி ரூபாய் பணம் தயாராக உள்ளதால், நீங்கள் கூடுதலாக 5 லட்சம் ரூபாய் பணமாக எடுத்து வாருங்கள் என தொடர்ந்து கூறிவந்துள்ளனர். இதனை நம்பி தெய்வேந்திரன் உடனடியாக 5 லட்சம் ரொக்க பணத்தையும் கொடுத்துள்ளார். இதனையடுத்து ரபி மற்றும் கலைச்செல்வியிடம் 18லட்சம் ரூபாய் பணம் கொடுத்த நிலையிலும் 20கோடிக்கான இரிடிய கலசமோ, பணமோ கொடுக்காத நிலையில், கலைச்செல்வி மற்றும் முகமது ரபியிடம் தெய்வேந்திரன் தான் கொடுத்த 18லட்சம் ரூபாய் பணத்தை கேட்ட போது தன்னை இருவரும் தொடர்ந்து செல்போனில் மிரட்டுவதாக கூறி தெய்வேந்திரன் தெற்குவாசல் காவல்நிலையத்தில்  புகார் அளித்துள்ளார். இதையடுத்து தெய்வேந்திரனின் புகாரின் அடிப்படையில்  திமுக நிர்வாகியான முகமது ரபி, மதுரையை சேர்ந்த கலைச்செல்வி ஆகிய இருவர் மீதும் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 2  பிரிவுகளின் கீழ் தெற்குவாசல் சரக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget