watch video: பாரம்பரிய முறைப்படி நெல் மூட்டைகளை மாட்டுவண்டியில் கொண்டு வந்த விவசாயிகள்
தூங்கா நகர் மதுரையில் பாரம்பரிய முறைப்படி நெல் மூட்டைகளை விவசாயிகள் தங்களது மாட்டு வண்டியில் எடுத்துச் சென்றனர்.
டிஜிட்டல் உலகில் உட்கார்ந்த இடத்திற்கே உணவு பொட்டலங்கள் ஆன்லைன் உதவியால் தேடி வருகிறது. இந்த நவீன காலகட்ட, சூழலில் வாழும் நமக்கு அவ்வப்போது தற்சார்பு வாழ்வியல் வாசம் வீசும் போது மனம் மகிழத்தான் செய்கிறது. அப்படியாக விவசாயிகள் தங்கள் நெல் மூட்டைகளை பாரம்பரிய முறைப்படி இரவில், மாட்டு வண்டியில் கொண்டு செல்லும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தூங்கா..., நகர் மதுரையில் பாரம்பரிய முறைப்படி நெல் மூட்டைகளை விவசாயிகள் தங்களது மாட்டு வண்டியில் எடுத்துச் சென்றனர். பொதும்பு கிராமத்தில் இருந்து மாட்டுத்தாவணி நெல் கொள்முதல் நிலையத்திற்கு எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தனர். #madurai | @SRajaJourno | @UpdatesMadurai @abpnadu pic.twitter.com/ft8qM5E3Bz
— arunchinna (@arunreporter92) February 16, 2023
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்