மேலும் அறிய
மதுரை: நாளை பராமரிப்பு மின் தடை.. ஜூலை 16 அன்று பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் !
மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று மின் வாரிய உதவி செயற்பொறியாளர்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.

மதுரையில் மின்தடை
Source : whatsapp
மதுரையில் பல இடங்களில் (16.07.2026) நாளை பல்வேறு இடங்களில் மின்தடை செய்யப்பட்டவுள்ளது.
மதுரை ; பொதுமக்களுக்கு தடையற்ற மற்றும் சீரான மின் விநியோகம் வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு, தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பில் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மின்சாரக் கம்பிகள், மின்மாற்றிகள் மற்றும் தடவாளப் பொருட்களின் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் முக்கிய துணை மின் நிலையங்களில் நாளை 16.07.2026 அன்று அவசர கால மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, அன்றைய தினம் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை குறிப்பிட்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் முக்கியப் பகுதிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று மின் வாரிய உதவி செயற்பொறியாளர்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.
அவனியாபுரம் - திருப்பரங்குன்றம்
* அவனியாபுரம் பஸ்ஸ்டாண்ட், * பைபாஸ் ரோடு, * மார்க்கெட்,
* செம்பூரணி ரோடு, * பிரசன்னா காலனி, * வைகை வீதிகள்,
* சந்தோஷ் நகர், * வள்ளலானந் தாபுரம், * ஜெ.ஜெ.,நகர்,
* வைக்கம் பெரியார் நகர் ரோடு, * ரிங்ரோடு, * பெரியசாமி நகர்,
* திருப்பதிநகர், * அண்ணாநகர், * அக்ரஹாரம், * ஜெ.பி.நகர்,
* திருப்பரங்குன்றம் ரோடு, * காசிதோட்டம், * கீழரதவீதி,
* பெரியரதவீதி குடியிருப்புகள், * பாம்பன் நகர், * பாப்பாகுடி,
* வெள்ளக்கல், * பர்மாகாலனி, * கணேசபுரம், * பெருங்குடி,
* அன்பழகன் நகர், * மண்டேலா நகர், * தபால் பயிற்சி கல்லுாரி,
* காவலர் குடியிருப்பு, * சின்ன உடைப்பு, * குரங்குதோப்பு,
* ஆண்டவர் நகர், * விமான நிலைய குடியிருப்பு, * ஸ்ரீராம்நகர்,
* தென்பரங்குன்றம், * திருப்பரங்குன்றம் கோயில்.
கீழையூர் - தர்மதானப்பட்டி
* கீழையூர், * கீழவளவு, * செமினிபட்டி, * கொங்கம் பட்டி,
* முத்துச்சாமிபட்டி, * தனியாமங்கலம், * சாத்தமங் கலம்,
* வெள்ளநாயகம்பட்டி, * உறங்கான்பட்டி, * குறிச் சிப்பட்டி,
* சருகு வலையபட்டி, * பெருமாள்பட்டி, * இ.மலம்பட்டி, * கரையிபட்டி,
* கோட்டநத்தாம்பட்டி, * வெள்ளலுார், * தர்மதானப்பட்டி.
உறங்கான்பட்டி - குன்னத்துார்
* உறங்கான்பட்டி, * தொழிற்பேட்டை, * வரிச்சியூர், * களிமங்கலம்,
* சக்குடி, * விளத்துார், * ஓடைப்பட்டி, * ராஜாக்கூர், * இளமனுார்,
* சக்கிமங்கலம், * கார்சேரி, * குன்னத்துார்.
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















