மேலும் அறிய
ஸ்டாலின் மீது மக்களுக்கு மரியாதை இல்லை: செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு
அமைச்சர் மூர்த்தி மேற்கு தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வளர்ப்பது குறித்து நாங்கள் கவலைப்படுவதே இல்லை - செல்லூர் ராஜூ பேட்டி.

செல்லூர் கே.ராஜூ
Source : whats app
முதல்வர் ஸ்டாலின் மீது மக்களிடத்தில் மதிப்பு மரியாதை இல்லை., இந்த ஆட்சியில் மக்கள் பயந்து போய் உள்ளார்கள் என மதுரையில் செல்லூர் ராஜூ பேட்டியளித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கலந்துகொண்ட நிகழ்ச்சி
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே அச்சம்பத்து பகுதியில் மதுரை தேனி செல்லும் சாலையில் உள்ள மந்தை திடலில் மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள மேற்கூரை அமைக்கும் விழா முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் நடைபெற்றது. முன்னதாக அங்குள்ள சந்தன மாரியம்மன் திருக்கோயிலில் சிறப்பு பூஜை செய்த பின்பு மேற்குறை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார்.
செல்லூர் கே.ராஜூ செய்தியாளர் சந்திப்பு
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்லூர் கே.ராஜூ..,” இந்தியாவில் அகமதாபாத்தில் விமான விபத்து நடந்ததற்கு அனைவரும் வேதனையில் உள்ளோம். விமான விபத்து நடந்ததற்கு அதிர்ச்சியில் உறைந்துள்ளோம். இறந்தவர்களின் குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த வருத்தத்தை, இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். பாஜக, அதிமுக கூட்டணி குறித்த கேள்விகளை எங்களது பொது செயலாளரிடம் கேளுங்கள். கூட்டணி குறித்து எங்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தாமல்., அமித்ஷா-விடம் பேசியதும், கூட்டணி குறித்தும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக பேசியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் மீது மக்களிடத்தில் மதிப்பு மரியாதை இல்லை.
ஒரு முன்னாள் அமைச்சரை தரக்குறைவாகவும்., அதனை கேட்பவரின் காதுகள் கூசும் அளவிற்கு முதல்வர் பேசியிருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் மீது மக்களிடத்தில் மதிப்பு மரியாதை இல்லை., இந்த ஆட்சியில் மக்கள் பயந்து போய் உள்ளார்கள். பொதுவிழாவில் ஒரு முதல்வர் தகுதியற்ற முறையில் பேசியது வன்மையாக கண்டிக்கக்கூடியது. தமிழக மக்கள் முதல்வரின் பேச்சை கடுமையாக கண்டித்து இருக்கிறார்கள் இந்த போக்கை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். எடப்பாடி மீது நாளுக்கு நாள் புகழும் மக்கள் செல்வாக்கும் இருப்பதால் முதல்வர் ஸ்டாலின் இதுபோன்று பேசி வருகிறார். மதுரையே அழகாக காட்சியளிக்க காரணம் அதிமுகவின் பல்வேறு திட்டங்களும்., 8000 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்ததால் தான். அரசர் காலத்திற்குப் பிறகு அம்மாவின் ஆட்சியில் எடப்பாடி கொடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்தார்.
அமைச்சர் மூர்த்தி மேற்கு தொகுதியில் செயல்படுவது கவலையில்லை
அமைச்சர் மூர்த்தி மேற்கு தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வளர்ப்பது குறித்து நாங்கள் கவலைப்படுவதே இல்லை. மக்களுக்கு தெரியும்., அதிமுக ஆட்சியில் நாங்கள் என்ன செய்தோம் என்பது மக்களுக்கு தெரியும் என்றார். மேலும்., மத்திய அரசின் திட்டங்களுக்கு தான் திமுக அரசு தனது லேபிள் ஒட்டுகிறது” என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















