மேலும் அறிய
10-ம் வகுப்பு படித்திருந்தால் போதுமே.. நீங்களும் பயிற்சி பெறலாம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !
Job Opportunity : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக Tractor Operator பயிற்சி வழங்கப்படவுள்ளது.

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Source : whats app
அரசு இயந்திர கலப்பை பணிமனைக்கு நேரில் சென்று தங்கள் பெயரினை பயிற்சிக்கு பதிவுசெய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Tractor Operator பயிற்சி வகுப்பு
வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக மூன்று கட்டமாக நடத்தப்படும் Tractor Operator பயிற்சி வகுப்புக்கு மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தகவல். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக Tractor Operator பயிற்சி மதுரை மாவட்டம்., நெல்லியேந்தல்பட்டி (விவசாய கல்லூரிக்கு) அருகில் உள்ள உதவிசெயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல்), அரசு இயந்திர கலப்பை பணிமனையில் நடத்திட சென்னை, தலைமைப்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.
25 நபர்கள் வீதம் மொத்தம் 3 கட்ட பயிற்சி வகுப்புகள்
அறிவுரை மேற்காணும் Tractor Operator பயிற்சி 22-நாட்களுக்கு ஒரு பயிற்சி வகுப்புக்கு 25 நபர்கள் வீதம் மொத்தம் 3 பயிற்சி வகுப்புகள் 2024 25ஆம் ஆண்டில் நடத்த அறிவுரை பெறப்பட்டு முதல் பயிற்சியானது 11.12.2024 முதல் 11.01.2025 வரை நடைப்பெற்றுள்ளது. தொடர்ந்து இரண்டாவது பயிற்சியானது 27.01.2025 முதல் 28.02.2025 வரை நடைப்பெற்று நிறைவு பெறவுள்ளது.
10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்
அதனை தொடர்ந்து 3-வது பயிற்சி மார்ச் 2025-ம் மாதத்தின் முதல் வாரத்தில் துவங்கப்பட உள்ளதால் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்வதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் வயது வரம்பு 18 முதல் 45 வயது வரை உள்ள மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தங்களது கல்வித்தகுதி சான்று, ஆதார் அட்டை மற்றும் புகைப்படம் ஆகியவற்றை மதுரை மாவட்டம், நெல்லியேந்தல்பட்டி (விவசாய கல்லுாரிக்கு) அருகில் உள்ள உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை), அரசு இயந்திர கலப்பை பணிமனைக்கு நேரில் சென்று தங்கள் பெயரினை பயிற்சிக்கு பதிவுசெய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் கூடுதல் விபரம்
மேலும் கூடுதல் விபரங்களுக்கு 9443677046, 9944344066, 8428981436 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. பயிற்சி முடித்த பின் ஓட்டுநர் உரிமம் பெற ஆவண செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தெரிவித்துள்ளார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - அரசுப் பள்ளிக்காக ரூ.1 கோடி சொத்தை கொடுத்த தம்பதி.. மதுரையில் மீண்டும், மீண்டும் முளைக்கும் மாணிக்கங்கள் !
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - மதுவுக்கு அடிமை.. மதுரை அரசு மருத்துவமனையில் போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் திறப்பு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion