மேலும் அறிய
மதுவுக்கு அடிமை.. மதுரை அரசு மருத்துவமனையில் போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் திறப்பு
போதை தடுப்பு சிகிச்சை மையத்தில் 4 ஆயிரம் பேர் வரை சிகிச்சை எடுத்து கொள்வதாகவும், பெண்களும் சிகிச்சை எடுத்துக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

போதை மறுவாழ்வு மையம்
Source : whats app
30 படுக்கைகளுடன் ஆண், பெண் தனித்தனியாக சிகிச்சை பெறும் வகையில் போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் திறக்கப்பட்டுள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை
மதுரை மட்டுமின்றி தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை என தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். கடினமாக செய்யக் கூடிய சவாலான அறுவை சிகிச்சைகள் கூட சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு வசதிகளை ராஜாஜி மருத்துவமனை கொண்டுள்ளதால் பொதுமக்கள் அதிகளவு வருகை தருகின்றனர். இந்த சூழலில் இங்கு போதை மறுவாழ்வு மையம் போதை மீட்பு சிகிச்சை தொடர்பாக அதிகளவு கூடுதல் வசதிகள் இல்லை என சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்தனர். இந்நிலையில் ராஜாஜி மருத்துவமனையில் 30 படுக்கைகளுடன் ஆண், பெண் தனித்தனியாக சிகிச்சை பெறும் வகையில் போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் திறக்கப்பட்டுள்ளது.
போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம்
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தொடங்கி வைத்தார். இதனை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனி வேல் தியாகராஜன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தை பார்வையிட்டார்.
இளைஞர்கள் அதிகம் சிகிச்சை எடுத்துக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஏற்கனவே 10 படுக்கைகளுடன் இருந்த போதை மீட்பு சிகிச்சை மையம் தற்போது 20 படுக்கைகள் அமைக்கப்பட்டு 30 படுக்கைகளுடன் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக போதை மற்றும் மதுவுக்கு அடிமையான ஆண்கள், பெண்கள் தனித்தனியாக சிகிச்சை பெறும் வகையில் வார்டு அமைக்கப்பட்டு இருப்பதாகவும், உறவினர்களுடன் வருகை தந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக அரசு மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஸ் தெரிவித்தார். மேலும் வருடத்திற்கு 4 ஆயிரம் பேர் வரை சிகிச்சை எடுத்து கொள்வதாகவும், பெண்களும் சிகிச்சை எடுத்துக்கொள்வதாகவும், அதிகளவில் மதுபோதைக்கு அடிமையானவர்கள் சிகிச்சை பெறுவதாகவும், இளைஞர்கள் அதிகம் சிகிச்சை எடுத்துக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Maha Shivratri 2025: ஒச்சாண்டம்மனுக்கு.. மாசிப் பெட்டி கொண்டு செல்லும் காட்சி காண கண்கோடி வேண்டுமே !
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - அடேங்கப்பா.. மதுரையே மாறப்போகுது.. ரயில்வே ஜங்ஷனா இது - எப்போ திறப்பாங்க..?
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















