மேலும் அறிய

அண்ணாநகரில் இளைஞர் மரணம்: காவல் விசாரணைக்கு பின் சடலம் மீட்பு! கொந்தளித்த மக்கள் - நடந்தது என்ன?

அண்ணாநகர் காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் சென்ற பட்டியலின இளைஞர் உயிரிழந்த விவகாரம் - மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு.

தினேஷ்குமாரின் உடல் கால்வாயில் இருந்து சடலமாக மீட்பு

மதுரை அண்ணாநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட யாகப்பா நகர் பகுதியை சேர்ந்த தினேஷ் குமார்(30) என்ற இளைஞரை நேற்று அதிகாலை அண்ணாநகர் காவல்துறையினர் மற்றும் தனிப்படையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து நேற்று மதியம் தினேஷ்குமாரின் உடல் கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது. பின்னர் தனது மகன் தினேஷ்குமார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டி உயிரிழந்த தினேஷ் குமார் குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்கள் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நேற்று மதியம் 3 மணி தொடங்கி  இரவு 9 மணி வரை அண்ண நகர் மற்றும் கே.கே நகர் பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்ணாநகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து காவல் துறையினர் நடத்திய பேச்சு வார்த்தையில் தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர். இந்நிலையில் ஆறு மணி நேர போராட்டம் காரணமாக மாநகர் முழுவதிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது அண்ணாநகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

தினேஷ் குமார் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதால் தினேஷ்குமாரின் உடலை நீதிமன்ற உத்தரவுப்படி வீடியோ பதிவு ஆவணங்கள் பாதுகாப்பு உள்ளிட்டவைகளை பின்பற்றி உடற்கூறாய்வு மேற்கொள்ள வேண்டும் என மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு தினேஷ் குமார் தரப்பினர் கடிதம். இதனிடையே தினேஷ்குமார் உயிரிழப்பு விவகாரத்தில் நீதி விசாரணை நடத்த கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. இளைஞர் தினேஷ்குமார் உயிரிழப்பு விவகாரத்தில் இன்று மீண்டும் போராட்டம் நடைபெறும் என்பதால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, அண்ணாநகர் பிரதான சாலை, மருத்துவமனை பிணவறை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , அண்ணா பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

Gen Z மனநிலை புரியவில்லை: பிரதமரை ரீல்ஸ் போட வைத்த புரட்சி - திருமாவளவன் !
Gen Z மனநிலை புரியவில்லை: பிரதமரை ரீல்ஸ் போட வைத்த புரட்சி - திருமாவளவன் !
சிவகங்கையில் அரிய 16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டெடுப்பு: புதைந்த ரகசியம்!
சிவகங்கையில் அரிய 16ஆம் நூற்றாண்டு வாணாதிராயர் கல்வெட்டு கண்டெடுப்பு: புதைந்த ரகசியம்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
முதலீட்டு மோசடி: FIR ரத்து மறுப்பு, புகார் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
முதலீட்டு மோசடி: FIR ரத்து மறுப்பு, புகார் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Tiruvannamalai Bypass Project: திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
Iran warns US : எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Embed widget