மேலும் அறிய
ஆளுநருக்கு திட்டங்களை ஆய்வு செய்ய அதிகாரம் இல்லை: மதுரை கூட்டத்தில் அமைச்சர், எம்.பி. அதிரடி!
மத்திய அரசின் அனைத்து துறைகள் ரீதியான ஆய்வுக்கூட்டத்தை நடத்த மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழுவிற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது - சு.வெங்கடேசன்.

ஆளுநருக்கு எதிராக அமைச்சர் மற்றும் எம்.பி
Source : whatsapp
மதுரையில் நடைபெற்றுவரும் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டத்தில் ஆளுநருக்கு எதிராக அமைச்சர் நிர்மல்குமார் மற்றும் எம்.பி.சு.வெங்கடேசன் பேச்சு - பரபரப்பு.
ஒருங்கிணைப்பு கண்காணிப்புகுழு கூட்டம்
மதுரை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்புகுழு கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. மதுரை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்புகுழு கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் அமைச்சர்கள் நிர்மல்குமார், விஸ்வநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் , மாநகர காவல் துணை ஆணையர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாநகராட்சி ஆணையாளர், எம்.எல்.ஏக்கள் மதுரை மாவட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில் மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
இந்திய அரசியல் சாசனம் எங்களுக்கு மட்டுமே உரிமை வழங்கியிருக்கிறது
தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கிய நிலையில் குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சு. வெங்கடேசன் உரை நிகழ்த்திய போது...," ஒன்றிய அரசுடைய எந்த ஒரு திட்டத்தையும் ஆய்வு செய்வதற்கான சட்ட உரிமை எங்களுக்கு மட்டும் தான் இருக்கிறது. அந்த சட்டம் வழங்கியிருக்கிற குழுவினுடைய தலைவர் மற்றும் குழு உறுப்பினர்கள் தான். இந்த அரங்கத்தை தாண்டி வெளியில் ஒரு குறிப்பிட்ட ஒன்றிய அமைச்சர் அவருடைய துறையை ஆய்வு செய்யலாம். ஆனால் பல துறைகள் ஆய்வு நடத்துவதற்கு இந்திய அரசியல் சாசனம் எங்களுக்கு மட்டுமே உரிமை வழங்கியிருக்கிறது. எங்கள் உரிமையை வேறு யாரேனும் எடுக்க நினைத்தாலும் அதனை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஒருவேளை யாராவது அப்படி ஆய்வு நடத்த அதிகாரிகளை அழைத்தால் எந்த அதிகாரிகளும் பங்கேற்க கூடாது. அப்படி பங்கெடுத்தீர்கள் என்றால் அடுத்த மீட்டிங்கில் உங்களுக்கு அழைப்பாணை சம்மன் அனுப்பப்பட்டு அது குறித்து விளக்கம் கேட்கப்படும். எனவே அரசியல் சாசனம் சட்டம் வழங்கியிருக்கின்ற அனைத்து துறைகளையும் ஆய்வு செய்கிற 39 அமைச்சகத்துக்கு கீழ் உள்ள 96 துறைகளை ஆய்வு செய்கிற அமைப்பு இந்த மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு தான். இது மதுரை மாவட்டத்திற்கு 100% உறுதிப்படுத்தப்படும் என அதிகாரிகளுக்கு தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன் என்றார்.
கடுமையான கண்டனம் தெரிவிக்கப்படும்
இதனை தொடர்ந்து அமைச்சல் நிர்மல்குமார் பேசியபோது : கவர்னர் ஒரு சில விஷயங்களை தெரிவித்துள்ளார். இங்க மட்டும் அல்ல தமிழக முழுவதிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் அதிகாரத்துக்கு உட்பட்டு ஆய்வு செய்யலாம். எந்தவித அதிகாரமும் இல்லாமல் கவர்னர் வந்து எங்கேயும் எந்த திட்டத்தை ஆய்வு செய்ய உரிமை இல்லை அதை இந்த அரசு என்றைக்கும் அனுமதிக்காது. எங்காவது தேவையில்லாமல் கவர்னர் இந்த அரசு நிர்வாகத்திலோ அல்லது ஆய்வு செய்யும் போக்கிலோ தலையிட்டால் அதற்கு கடுமையான கண்டனம் தெரிவிக்கப்படும்.
எந்த ஆய்வுக்கும் செல்லக்கூடாது
எந்தவித அதிகாரிகளும் அரசின் அனுமதி பெறாமல் ஒத்துழைப்பு கொடுக்கக் கூடாது என அரசின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது கவர்னர் தேவையில்லாமல் அவர் ஆய்வு செய்வதும் தேவையில்லாமல் தலையிடுவதும் தேவையில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்தும் அவருக்கு அந்த அதிகாரம் கிடையாது. அவர் தலையிடும் அதிகாரம் கிடையாது. இங்கமட்டுமல்ல தமிழகம் முழுவதிலும் இதே நிலைமைதான் இருக்கும். அதிகாரிகளும் அதற்கு உட்பட்டு அழைப்பு வந்தால் அரசின் அனுமதி இல்லாமல் எந்த ஆய்வுக்கும் செல்லக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன் என பேசினார்.
Before You Go
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















