மேலும் அறிய

விருதுநகரில் ஆசிரியர் தகுதித்தேர்வு: ஜூலை 4, 5ஆம் தேதி நடைபெறும் தேர்வுக்கு முழு ஏற்பாடு !

தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம், குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதிகள் போதிய அளவில் இருப்பதை மாவட்ட நிர்வாகத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் தாள் 04.07.2026 அன்றும், இரண்டாம் தாள் 05.07.2026 அன்றும் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தகுதித்தேர்வு

விருதுநகர் மாவட்டத்தில், பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு முதல் தாள் 04.07.2026 அன்று 7 மையங்களிலும், இரண்டாம் தாள் 05.07.2026 அன்று 14 மையங்களிலும் நடைபெறவுள்ளது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும், ஆசிரியர் தகுதித் தேர்விற்கான அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, இத்தேர்விற்கான முதல் தாளினை விருதுநகர் மாவட்டத்தில் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 266 தேர்வர்களும், சொல்லுவதை எழுதுபவர்கள் (Scribes) 6 நபர்களும், சிவகாசி முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில்  300 தேர்வர்களும், 40 மாற்றுத்திறனாளிகளும்,  விருதுநகர்  நோபிள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 289 தேர்வர்களும், 09 மாற்றுத்திறனாளிகளும், சாத்தூர் எஸ்.எச்.என்.எட்வர்ட் மேல்நிலைப்பள்ளியில் 300 தேர்வர்களும், அருப்புக்கோட்டை தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 300 தேர்வர்களும், அருப்புக்கோட்டை சாலியர் மகாஜன சபை மேல்நிலைப்பள்ளியில் 300 தேர்வர்களும், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கன்னட மொழிக்கு ஒரு தேர்வரும், தமிழ் மொழிப் பாடத்திற்கு 177 தேர்வர்களும் என ஆக மொத்தம் 7 மையங்களில் 1933 தேர்வர்களும், 49 மாற்றுத்திறனாளிகளும், 06 சொல்லுவதை எழுதுபவர்களும் (Scribes) முதல் தாளினை எழுத உள்ளனர்.  

05.07.2026 அன்று நடைபெறவுள்ள இரண்டாம் தாள்

அதனைத் தொடர்ந்து, 05.07.2026 அன்று நடைபெறவுள்ள இரண்டாம் தாளினை விருதுநகர் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 268 தேர்வர்களும், சொல்லுவதை எழுதுபவர்கள் (Scribes) 8 நபர்களும், சிவகாசி முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் 284 தேர்வர்களும், 04 சொல்லுவதை எழுதுபவர்களும் (Scribes)  விருதுநகர் நோபிள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 280 தேர்வர்களும், 40 மாற்றுத்திறனாளிகளும், சாத்தூர் எஸ்.எச்.என்.எட்வர்ட் மேல்நிலைப்பள்ளியில் 277 தேர்வர்களும், 17 மாற்றுத்திறனாளிகளும், சாத்தூர் எஸ்.எச்.என்.எத்தில்ஹார்வி மேல்நிலைப்பள்ளியில் 280 தேர்வர்களும், அருப்புக்கோட்டை சாலியர் மகாஜன சபை மேல்நிலைப்பள்ளியில் 280 தேர்வர்களும், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 280 தேர்வர்களும், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 223 தேர்வர்களும், அருப்புக்கோட்டை தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 262 தேர்வர்களும், 02 சொல்லுவதை எழுதுபவர்களும் (Scribes) திருத்தங்கல் எஸ்.என்.ஜி.பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 270 தேர்வர்களும், 30 மாற்றுத்திறனாளிகளும், திருத்தங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 280 தேர்வர்களும்,  திருத்தங்கல் எஸ்.ஆர்.அரசு மேல்நிலைப்பள்ளியில் 280 தேர்வர்களும், சிவகாசி கார்நேசன் மேல்நிலைப்பள்ளியில் 280 தேர்வர்களும், சிவகாசி எஸ்.எச்.என்.வி.மேல்நிலைப்பள்ளியில் 245 தேர்வர்களும் என ஆக மொத்தம் 14 மையங்களில் 3789 தேர்வர்களும், 87 மாற்றுத்திறனாளிகளும், 14 சொல்லுவதை எழுதுபவர்களும் (Scribes) இரண்டாம் தாளினை எழுத உள்ளனர்.  மேலும், தேர்வானது மாற்றுத்திறனாளிகள் மற்றும் சொல்லுவதை எழுதுபவர்களுக்கு (Scribes) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரையிலும், பிற தேர்வர்களுக்கு காலை 10.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரையிலும் நடைபெறவுள்ளது. மேலும், தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம், குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதிகள் போதிய அளவில் இருப்பதை மாவட்ட நிர்வாகத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் எவ்வித அச்சமும், பதற்றமும் இன்றி முழு நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget