ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ரயில் மறித்த வழக்கில் 23 பேரை விடுதலை
கடந்த 5ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவந்த நிலையில் 23 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வேண்டி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கடந்த 2017ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், தமுக்கம் மைதானம், உள்ளிட்ட பல இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது செல்லூர் அருகே மதுரையை நோக்கிவந்த ரயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
#madurai | ஜல்லிக்கட்டு வழக்கில் ரயிலை மறித்த போராட்டம் - 23பேரை விடுதலை செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 5 வருடமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற நிலையில் 23 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.#jallikattu | @ksivasenapathy | #maduraicourt | @saranram ..//. pic.twitter.com/yXkorkIDnm
— Arunchinna (@iamarunchinna) April 19, 2022





















