மேலும் அறிய
Advertisement
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ரயில் மறித்த வழக்கில் 23 பேரை விடுதலை
கடந்த 5ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவந்த நிலையில் 23 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்
ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வேண்டி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கடந்த 2017ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், தமுக்கம் மைதானம், உள்ளிட்ட பல இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது செல்லூர் அருகே மதுரையை நோக்கிவந்த ரயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
#madurai | ஜல்லிக்கட்டு வழக்கில் ரயிலை மறித்த போராட்டம் - 23பேரை விடுதலை செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 5 வருடமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற நிலையில் 23 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.#jallikattu | @ksivasenapathy | #maduraicourt | @saranram ..//. pic.twitter.com/yXkorkIDnm
— Arunchinna (@iamarunchinna) April 19, 2022
அப்போது வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு கலவரம் போல மாறியது இது தொடர்பாக 23 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு மதுரை மாவட்ட குற்றவியல் 4 -வது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் ‘ ‘ - மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து தொடர்பாக காஞ்சி பக்தரின் RTI கேள்வி - 70 தூண்களின் தற்போதைய நிலை குறித்து முறையாக பதில் தராத கோயில் நிர்வாகம்
இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கில் தொடர்புடைய 23பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். கடந்த 5ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவந்த நிலையில் 23பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - HOTSTAR-இல் ஒளிபரப்பாகும் IPL போட்டியை தனி செயலியை உருவாக்கி ஒளிபரப்பிய சிவகங்கை இளைஞர் கைது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion