மேலும் அறிய
மதுரை மாநகராட்சி: ஊழல், மோசடி, மக்கள் அவதி...! செல்லூர் ராஜூவின் பரபரப்பு குற்றச்சாட்டு!
மதுரை சாலைகளில் சர்க்கஸில் சாகசம் செய்வது போல மதுரை மக்கள் பயணிக்கிறார்கள். நாளிதழில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ செய்தியாளர் சந்திப்பு
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ..,” மதுரையில் கலைஞர் நூலகம் என்று ரூ.216 கோடியில் கட்டி இருக்கிறார்கள். மதுரை மக்களுக்கு எந்த ஒரு திட்டமும், இந்த நான்கரை ஆண்டுகளில் செய்யவில்லை. இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள் மதுரையில், சாலைகள் எல்லாம் குண்டும் குழியுமாக உள்ளன. தினகரன் நாளிதழில் ”மதுரை மக்கள் சாகச பயணம் செய்கிறார்கள்” என்று அவர்களுடைய பத்திரிகைலையே இவ்வாறு செய்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத்தான் சட்டமன்றத்தில் நான் எடுத்துரைத்தேன். மதுரை மக்கள் படுகின்ற துன்பங்கள் துயரங்களை எடுத்துச் சொல்லுகின்ற வாய்ப்பு துணை கேள்வி மூலமாக எனக்கு கிடைத்தது. எங்கு பார்த்தாலும் குண்டம் குழியுமான சாலைகள் சேதமடைந்து இருக்கின்றன. பாதாள சாக்கடை ஆறாக ஓடுகிறது. மழை நீர் வடிகால் முறையாக பராமரிக்கப்படாததனால் சாலைகளின் நீர் நிறைந்து நிற்கிறது. மக்கள் சர்க்கஸில் சாகசம் செய்வது போல பயணித்து வருகிறார்கள், என குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் அதற்கு அமைச்சர் கோபித்தார். இருந்தபோதிலும் இன்று அவர்களுடைய பத்திரிகையிலேயே உண்மை நிலையை எடுத்துரைப்பது குறிப்பிடத்தக்கது.
சரியில்லாத மாநகராட்சி
மதுரை மாநகராட்சியில் மேயர் முதல் மண்டல தலைவர்கள் நிலைகுலுத்தலைவர்கள் இல்லாத ஒரு மாநகராட்சியாக உள்ளது. மதுரை மாநகராட்சி ஊழல் நிறைந்த மாநகராட்சியாக மக்களுடைய வரிப்பணத்தை கொள்ளையடித்த மாநகராட்சியாக 200 கோடி கொள்ளை அடித்த மாநகராட்சியாக உள்ளது. ஒரு நீதி அரசரே இன்று சுட்டிக்காட்டி ”மதுரை மாநகராட்சியில் மிகப்பெரிய மோசடி நடந்திருக்கிறது. உடனடியாக மீண்டும் மதுரையில் இருக்கின்ற 100 வார்டுகளிலும் இருக்கின்ற கட்டடங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும்” என்று கூறி இருக்கிறார். ஒரு குழுவை அமைத்திருக்கின்றார் ஐஜி தலைமையில் என்றால் இந்த ஆட்சியினுடைய நிர்வாகம் எப்படி இருக்கின்றது.
விரல் புரட்சி
இரண்டு அமைச்சர்கள் இங்கே இருக்கின்றார்கள், அரசு நிகழ்ச்சிகளில் மட்டுமே சென்று போட்டோ சூட்டிங் முதலமைச்சரை போல எடுத்துக் கொண்டு வருகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில் மக்களை சந்தித்து நேரடியாக பார்த்து சந்தித்து, இந்த பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று ஆய்வு செய்து, அதிகாரிகளையும் பணிகளையும் முடித்துவிட்டு பணிகளை நிறைவு செய்ய வேண்டும். இந்த அமைச்சர்கள் ஈடுபடுவது கிடையாது ஆனால் 10 தொகுதியையும் வென்றெடுப்போம் என்று மட்டும் சொல்கிறார்கள். மக்கள் தான் எஜமானர்கள் மக்கள் தான் நீதிமன்றம். வருகிற தேர்தலில் திமுகவிற்கு சரியான பதிலை ஒரு விரல் புரட்சி மூலமாக மதுரை மக்கள் கொடுக்க வேண்டும். நான்கு தொகுதிகளும் மாநகராட்சி பகுதிகளில் இருக்கின்ற மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். 69 மாமன்ற உறுப்பினர்கள் இருந்தும் ஒரு மாநகராட்சி மேயரை கூட தேர்ந்தெடுக்க முடியாமல், ஐந்து மண்டல தலைவர்களை தேர்ந்தெடுக்க முடியாமல், நிலை குழு தலைவரை தேர்ந்தெடுக்க முடியாத அரசு தான் கையாலாகாத அரசுதான் திமுக” என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















