மேலும் அறிய
Advertisement
Madurai Corona Impact: மதுரையில் கடந்த ஒரு மாத பாதிப்பு என்ன ? உயிரிழப்பு, தடுப்பூசி இருப்பு விபரங்கள் !
மதுரையில் நேற்று வரை மொத்தம் 3 லட்சத்து 87 ஆயிரத்து 4 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் பொதுமக்கள் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத சூழலை பார்க்க முடிகிறது. மதுரை மாவட்டத்தில் கடந்த மார்ச் 15 தேதி முதல் ஜூன் 13 வரை 48737 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிப் படைந்துள்ளனர். அதே போல் அதே காலகட்டத்தில் 42881 நபர்கள் குணமடைந்து வீடி திரும்பியுள்ளனர்.
அதே போல் 579 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 15.03.21 முதல் 13.06.2021 கணக்குப்படி 613315 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மதுரையில் நேற்று வரை மொத்தம் 387004 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி அரசு இராசாசி மருத்துவமனை, தாலுகா மருத்துவமனை, ஆரம்ப சுகாதாரநிலையம், மருந்து கிடங்கு என எல்லா இடங்களையும் சேர்த்து மதுரையில் 19940 தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது.
கொரோனா இரண்டாவது அலையில் சமீபத்தில் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பு இருந்தது தற்போது அந்த நிலை மாறியுள்ளது. கடந்த மாதம் 14ம் தேதி முதல் நேற்று 13.06.2021 வரை கிட்டதட்ட 28562 நபர்கள் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். அதே போல் இந்த 31 நாட்களில் 383 நபர்கள் மதுரையில் உயிரிழந்துள்ளனர். கடந்த மாதம் 28 தேதி வரை தொற்று பாதிப்பு தீவிரம் அடைந்த நிலையில் 29 தேதியில் நான்கு இழக்க எண் பாதிப்பு மூன்று இழக்கு எண்ணாக குறைந்தது. மே 26ஆம் தேதி அதிகபட்சமாக ஒரே நாளில் 1538 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. கடந்த 3ஆம் தேதிக்கு பின் தொற்று 500க்கும் கீழ் குறைந்துள்ளது. அதே போல் மே 21,22 தேதிகளில் உயிரிழப்பு எண்ணிக்கை 27 - 28 நபர்களாக இருந்துள்ளது. தற்போது 10க்கும் குறைவான எண்ணிக்கையில் மட்டும் உயிரிழப்பு ஏற்படுகிறது, என்பது சோகத்திலும் ஆறுதல்.
மதுரையில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள 7 சிறப்பு முகாம்கள் மூலம் பொதுமக்கள், மாநகராட்சி ஊழியர்கள், நகைக்கடை உரிமையாளர்கள், பணியாளர்கள், கார் ஓட்டுநர்கள், வணிக நிறுவன ஊழியர்கள், மருந்து பொருள் விற்பனையாளர்கள் உள்ளிட்ட மருத்துவ துறை ஊழியர்கள் உள்ளிட்ட மக்களிடம் நேரடி தொடர்பில் உள்ளவர்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
மாவட்டத்தில் கொரோனா மொத்த பாதிப்பு 70 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் குழந்தைகள் சிறப்பு கொரோனா வார்டில் 1 வயதுடைய இரண்டு குழந்தைகளும், 3 வயது, 4 வயதில் தலா இரண்டு குழந்தைகளும் சிகிச்சை பெறுகின்றனர். அதே போல் 8 வயதிற்கு உட்பட்ட நான்கு குழந்தைகளும் கொரோனா சிகிச்சை பெறுகின்றனர், என்ற தகவல் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா தொற்று சில நாட்களாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் எண்ணிக்கை இன்னும் குறையும்.
இதை மிஸ் பண்ணாதீங்க பாஸ் -சந்தன பொட்டு, கதம்பம், சம்மங்கி மாலை' டிரான்ஸ்பார்மருக்கு விபூதியடித்த அமைச்சர்.!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திரை விமர்சனம்
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion