மேலும் அறிய

எடப்பாடியார் எழுச்சி பயணத்தில் குழப்பத்தை ஏற்படுத்த காலி ஆம்புலன்ஸை உள்ளே புகுத்தி சதி? - டாக்டர் சரவணன்

உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் சேவையை திமுக அரசு அன்று ஓட்டுக்காக பணத்தை பதுக்கவும், இன்றைக்கு எடப்பாடியாரின் எழுச்சி பயணத்தை திசை திருப்பவும் பயன்படுத்துவதா? - டாக்டர் சரவணன் கேள்வி.

108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் கோரிக்கையை நிறைவேற்றாமல்  தற்போது அமைச்சர் மா.சு. நீலிகண்ணீர் வடிப்பதை மக்கள் நம்ப மாட்டார்கள் என டாக்டர் பா.சரவணன் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

டாக்டர் சரவணன்
 
அ.தி.மு.க., மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் தனது செய்திக்குறிப்பில்..,” தமிழகத்தில் எடப்பாடியாரின் எழுச்சி பயணம் மாபெரும் வெற்றி அடைந்து வருகிறது. தொடர்ந்து முதலாம் கட்டம், இரண்டாம் கட்டம், தற்போது மூன்றாம் கட்டத்தில் மக்களின் எழுச்சி பயணத்தை  கண்டு ஸ்டாலினுக்கும், அவரது அமைச்சர்கள் சகாக்களுக்கும் நடுங்கமே வந்துவிட்டது. முதலில் திமுக மூத்த தலைவர்கள் மற்றும் மூத்த அமைச்சர்களை வைத்து விமர்சனம் செய்தார்கள் அது மக்களிடத்தில் எடுபடவில்லை. 
 
நீலிக்கண்ணீர் வடிப்பது ஏன்?
 
இதனை தொடர்ந்து திமுக தற்போது ஒரு அரசியல் தரம் தாழ்ந்த திட்டத்தை கையாண்டு வருகிறார்கள், எடப்பாடியார் எழுச்சி பயணத்தில் எங்கெல்லாம் பேசுகிறாரோ அந்த கூட்டத்தில் காலியான ஆம்புலன்ஸ் வாகனத்தை உள்ளே புகுந்தி கூட்டத்தை திசை திருப்புகிறார்கள். இதை எடப்பாடியார் சுட்டி காட்டிய போது அமைச்சர் மா.சு. தங்களின் தில்லு முல்லுவை மறைக்க செய்தியாளர் சந்திப்பில், எடப்பாடியார் மிரட்டும் தோணியில் பேசி உள்ளார் என்று கூறியுள்ளார் , அமைச்சர் மா.சு.திடீரென்று 108 ஆம்புலன்ஸ் டிரைவர் மீது நீலிக்கண்ணீர் வடிப்பது ஏன்? 
 
மா.சு.வாய் திறக்கவில்லை.
 
தமிழகத்தில் 1,352 ஆம்புலன்ஸ் உள்ளது, ஏறத்தாழ 6,000 மேற்பட்ட டிரைவர்கள் பணியாற்று வருகிறார்கள் .தொடர்ந்து பணி நிரந்தரம் கேட்டு போராடி வருகின்றனர், இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு 2025- 2026 ஆண்டுகளில் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப 30 சதவீதம் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் இல்லை என்றால் அக்டோபர் மாதம் நாங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் என்று தொடர்ந்து அரசை எச்சரித்து வருகிறார்கள், ஆனால் இதைப் பற்றி இதுவரை அமைச்சர் மா.சு.வாய் திறக்கவில்லை. உண்மையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது அக்கறை இருக்குமானால் இந்நேரம் அவர்கள் கோரிக்கை நிறைவேற்றி இருக்க வேண்டாமா? 
 
ஆம்புலன்ஸ் தேவையை தவறாக பயன்படுத்துகிறது
 
அது மட்டுமல்ல ஸ்டாலின் ரோடு ஷோ நடத்துகிறார், அதேபோல அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் அப்போதெல்லாம் ஆம்புலன்ஸ் அந்தக் கூட்டத்திற்குள் வருவதில்லை, ஆனால் எடப்பாடியார் எழுச்சி பயணத்தில் பேசும் பொழுது காலி ஆம்புலன்ஸ் வருகிறது. இது இயற்கையாக நடைபெறுவதாக இல்லை, நான் சிலரிடம் விசாரித்த போது எனக்கு அதிர்ச்சியான தகவல் வந்தது, அதில் எடப்பாடியார் பேசுகின்ற கூட்டங்களில்108 ஆம்புலன்ஸ் தேவையை தவறாக பயன்படுத்துவதாகவும், அதேபோல தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்ஸை தவறாக பயன்படுத்துமாறு மிரட்டப்படுவதாக செய்தி வருகிறது.  பொதுவாக காலி ஆம்புலன்ஸ் வரும் பொழுது அதை நிறுத்தி விசாரிக்கலாம் என்ற விதிமுறை உள்ளது. இது கூட தெரியாத அமைச்சராக மாசு உள்ளார்.
 
அநாகரிக அரசியல்
 
அம்மா ஆட்சிக்காலத்தில் 108 ஆம்புலன்ஸ் மக்கள் உயிரை காக்கும் சேவையாக பயன்பட்டது, ஆனால் இன்றைக்கு ஸ்டாலின் திமுக அரசு தேர்தலை காலங்களில் பணத்தை பட்டுவாடா பதுக்குவதற்கும், தற்போது எடப்பாடியாரின் எழுச்சி பயணத்தை திசை மாற்றம் செய்வதற்கு பயன்படுத்துகிறது. காலி ஆம்புலன்ஸ் மூலம் அநாகரிக அரசியல் செய்யும் திமுகவை 2026 தேர்தலில் மக்கள் காலி செய்து வீட்டுக்கு அனுப்புவார்கள் என கூறினார்.
 

தலைப்பு செய்திகள்

ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget