மேலும் அறிய

“காலில் விழக்கூடாது, உரிமையோடு கேளுங்கள்” - ஆட்சியரை பார்த்து நெகிழ்ந்த மதுரை மக்கள்

”மனுக்கள் என்பது வாங்குவதற்கு மட்டுமல்ல, நடவடிக்கை எடுப்பதற்காக தான். உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து அதன் அறிக்கையை தாக்கல் செய்யுங்கள்” - அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய மதுரை மாவட்ட ஆட்சியர்.

குறைதீர் கூட்டங்களில் பெறப்படும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த இரண்டு வாரங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியுள்ளார் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார்.
 
மதுரையில் புதிய மாவட்ட ஆட்சியர்
 
மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக பிரவீன் குமார் பொறுப்பேற்ற நிலையில், கடந்த இரண்டு வாரமாக குறைதீர் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் குறித்து குறைதீர் கூட்டத்திற்கு முன்பாக அனைத்துதுறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் நடத்தினார். அப்போது ஒவ்வொரு அதிகாரிகளிடம் துறைவாரியாக எத்தனை மனுக்கள் நிலுவையில் உள்ளது, ஏற்கனவே கடந்த 2 குறைதீர் கூட்டங்களில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீதான நடவடிக்கை என்ன? என்பது குறித்து கேள்வி எழுப்பினார்.
 
அதிகாரிகள் திணறல்
 
அப்போது ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களில் வந்த மனுக்களின் எண்ணிக்கை குறித்து, அதிகாரிகளிடம் கேட்டார். ஆனால், முன்னுக்கு பின் பதிலே மிஞ்சியது. உடனே மாவட்ட ஆட்சித் தலைவர் இணையதளம் மூலமாக மனுக்களின் தன்மையை பார்வையிட்டார். பெறப்பட்ட மனுக்களின் மனுதாரர் பெயர், மனுக்களின் நிலை குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள் திணறினர்.  
 
ஆஜராக நேரிடும்
 
பின்னர் அதிகாரிகளிடம் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் குமார், குறைதீர் கூட்டம் என்பது மனுக்களை பெறுவதற்கான கூட்டம் அல்ல, பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை மதித்து அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான முகாம் தான். எனவே ஒவ்வொரு மனுக்கள் மீதும் அடுத்த வாரத்திற்குள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த மனுவிற்கு தீர்வு கிடைக்க வேண்டும், என அறிவுறுத்தினார். மாவட்ட அளவில் அரசு அலுவலகங்களில் அரசு துறைகளில் உள்ள நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பான கேள்வியை எழுப்பினார். அப்போது நீதிமன்ற அவமதிப்புக்கு உட்படக்கூடிய வழக்குகள் மீது அதிகாரிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். எனவும், தற்போதையுள்ள மனுதாரர்கள் அதிகாரிகளுடைய பெயர்களுடன் வழக்கு தாக்கல் செய்வதால், நீங்கள் எந்த இடத்திற்கு பணி மாறுதல் ஆனாலும் கூட இந்த வழக்கில் தொடர்ந்து ஆஜராக நேரிடும் என்றார்.
 
மாவட்ட ஆட்சியர் உத்தரவு
 
மேலும் ஒவ்வொரு அதிகாரிகளுக்கும், சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வகுப்புகள் எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளிடம்  மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர், ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளிடம் தனி கவனத்துடன் கோரிக்கை மனுக்களை பெற்று அது குறித்து கேட்டறிந்தார். அப்போது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க முயலும்போது  ”நீங்கள் எழுந்து நிற்கக்கூடாது” என கூறி. மாற்றத்திறனாளிகள் அருகில் நின்று கோரிக்கையை கேட்டறிந்தார். மேலும் மனுக்கள் குறித்து உடனடியாக அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளை வரவழைத்து அந்த பகுதியிலேயே தீர்வு காண வைத்தார். அப்போது மாற்றுத்திறனாளி ஒருவர் காலில் விழுந்த போது ”இப்படி காலில் விழுந்து எதையும் கேட்கக்கூடாது. உரிமையோடு கேளுங்கள், உங்களுடைய உரிமை” என பதில் கூறிய மாவட்ட ஆட்சியர் உடனடியாக அவர் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஆரம்பம்; வினாத்தாளை புகைப்படம் எடுக்கத்தடை- விடுமுறை எப்போது?
பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஆரம்பம்; வினாத்தாளை புகைப்படம் எடுக்கத்தடை- விடுமுறை எப்போது?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
Pongal Gift: மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?
India Citizenship: இந்திய குடியுரிமைக்கு யார்? எப்படி? விண்ணப்பிக்கலாம்? தகுதிகள் என்ன?
India Citizenship: இந்திய குடியுரிமைக்கு யார்? எப்படி? விண்ணப்பிக்கலாம்? தகுதிகள் என்ன?
Shubman Gill: ஹர்திக் ஆசையில் மண்ணள்ளி போடும் கில்.. இன்னும் இந்த பரிசோதானை அவசியமா? முடிவுக்கு வருமா?
Shubman Gill: ஹர்திக் ஆசையில் மண்ணள்ளி போடும் கில்.. இன்னும் இந்த பரிசோதானை அவசியமா? முடிவுக்கு வருமா?
Embed widget