மேலும் அறிய
காளைகளின் பெயர்களை அறிவிப்பதற்காக GPAY மூலமாக பணம்.. ஜல்லிக்கட்டு வர்ணனையாளர்கள் மீது புகார் !
மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் வர்ணணையாளர்கள் சில காளைகளின் பெயர்களை அறிவிப்பதற்காக GPAY மூலமாக பணம் பெறுவதாக குற்றச்சாட்டு.

ஜல்லிக்கட்டு
மதுரை அலங்காநல்லூர் உள்ளிட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் மதுரையை சேர்ந்த வர்ண்ணையாளர்களை ஒவ்வொரு சுற்றுவாரியாக நியமிக்க கோரி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நலச்சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு வர்ணனையாளர்கள் மீது புகார்
மதுரை மாவட்டம் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு ,அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும் பொங்கல் விழாவின்போது நடைபெறும். இந்த போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் குறித்த வர்ணனைகளில் புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வர்ணனையாளர்கள் வரவழைக்கப்பட்டு வர்ணனை செய்து வருகின்றனர். இந்நிலையில் வெளியூர்களில் இருந்து வருகை தரும் வர்ணனையாளர்கள் காளை உரிமையாளர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு குறிப்பிட்ட காளைகளின் பெயர்களை பல முறை பெருமையாக பேசுவதோடு வெற்றி அறிவிப்பையும் வெளியிடுவதால் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகளில் குழப்பம் நிலவிவருகிறது. மேலும் பணம் கொடுக்காத ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள் தங்களது காளைகளின் பெயர்களை கூட வாசிக்காமல் அனுப்பிவைக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
வீரர்களுக்கு அரசே மருத்துவ காப்பீடு வசதி செய்து தரவேண்டும்
எனவே போட்டிகளின் போது வர்ணையர்களுக்கும் ஒவ்வொரு பேட்ஜிற்கும் ஒருவர் என்ற விகிதத்தில் தேர்வு செய்ய வேண்டும், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வர்ணனையாளர்களையும் ஈடுபடுத்த வேண்டும் என கூறியும், காளை உரிமையாளர்கள் மாடு பிடி வீரர்களுக்கு அரசே மருத்துவ காப்பீடு வசதி செய்து தரவேண்டும், போட்டி நடைபெறும் இடங்களில், அறுவை சிகிச்சை செய்யப்படும் வசதி உள்ள மருத்து கேரவன்கள் அமைத்து, உயிரிழப்பை தடுக்க முயற்சிக்க வேண்டும். உயிரிழந்த மாடு பிடி வீரர்களின் குடும்பத்திற்கு, அரசு வேலை அவர்களின் தகுதிகேற்ப வழங்க வழிவகை செய்ய வேண்டும். ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நல சங்கத்தின் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கிட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் பேரணியாக நடந்து வந்து தங்களது கோரிக்கைகளை முழக்கங்களை எழுப்பினர்.

எந்தவித கோரிக்கைகளையும் நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் தெரிவித்தார்
இது குறித்து தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நலச்சங்கம் நிறுவனத் தலைவர் முடக்கத்தான் மணி பேசியபோது...,” மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியின் போது வெளியூர்களிலிருந்து வர்ணனையாளர்களை அழைத்துவருகின்றனர். இதனால் அவர்கள் காளை உரிமையாளர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபடுவதாகவும், ஜல்லிக்கட்டு போட்டியின் போது காயம் அடையும் வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வாகனங்களை தயார் செய்ய வேண்டும் எனவும், இந்த அரசு ஜல்லிக்கட்டு மாடு பிடி வீரர்களின் எந்தவித கோரிக்கைகளையும் நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement