மேலும் அறிய
அஜித்குமார் கொலை வழக்கு 9-வது நாளாக நீடிக்கும் சி.பி.ஐ., விசாரணை... அதிர்ச்சி தரும் ஆதாரங்கள் !
அஜித்குமார் கொலை வழக்கு 9 வது நாளாக நீடிக்கும் சிபிஐ விசாரணை - மதுரை சிபிஐ அலுவலகத்தில் 2 ஆவது முறையாக விசாரணைக்காக ஆஜரான சாட்சியங்கள்.

மதுரை சி.பி.ஐ அலுவலகம்
Source : whats app
மதுரை சி.பி.ஐ., அலுவலகத்தில் நடைபெறும் விசாரணையில் சாட்சியங்கள் அளிக்கும் தகவல்கள் குறித்து திருப்புவனம் காவல் நிலையத்தில்( CROSS CHECK ) தகவல் உறுதிப்படுத்தும் விசாரணையில் ஈடுபடும் சிபிஐ அதிகாரிகள்.
உயிரிழந்த மடப்புரம் அஜித்குமார்
சிவகங்கை மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் நகை காணாமல் போனது தொடர்பாக, திருப்புவனம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அஜித்குமாரை தாக்கி விசாரணை நடத்தியதில் அவர் உயிரிழந்தார். இந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு, தனிப்படை காவலர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இதனை அடுத்து இந்த வழக்கானது மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்த போது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிபிஐ சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சிபிஐ விசாரணை
இதனையடுத்து சி.பி.ஐ., அதிகாரி டி.எஸ்.பி., மோகித் குமார் தலைமையிலான சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அஜித்குமாருடன் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சக ஊழியர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களான ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், உதவி ஆணையரின் ஓட்டுனர் கார்த்திக்வேல், பிரவின்குமார், வினோத்குமார் மற்றும் நவீன்குமார் ஆகிய 5 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சிபிஐ சார்பில் சம்மன் அளிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் மதுரை சிபிஐ அலுவலகத்தில் 5 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
ரீ- கிரியேசன் விசாரணை
இதன் தொடர்ச்சியாக 6ஆவது நாள் விசாரணையாக சனிக்கிழமையன்று திருப்புவனம் மற்றும் மடப்புரம் ஆகிய பகுதிகளில் விசாரணை நடைபெற்றது. காவலாளி அஜித்குமார் மற்றும் அவரது தம்பி நவின், ஆட்டோ ஓட்டுனர் அருண்குமார், அஜித்குமாரின் நண்பர்கள் பிரவீன்குமார், வினோத்குமார் ஆகியோரை ஜூன் 27, 28 ஆம் தேதி தனிப்படை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ரீ- கிரியேசன் எனப்படும் சம்பவம் குறித்து விசாரணை ஆதாரங்களை சேகரிக்கும் விசாரணையை மேற்கொண்டனர்
CROSS CHECK தகவல் சரிபார்ப்பு
இந்நிலையில் திருப்புவனம் காவல் நிலையத்தில் கடந்த 27ஆம் தேதி நிகிதா அளித்த புகார் தொடர்பாகவும் அஜித் குமாரை விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட போது, நடைபெற்ற சம்பவம் தொடர்பாகவும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மதுரை சிபிஐ அலுவலகத்தில் 4 பேர் அளிக்கும் சாட்சியம் மற்றும் தகவல் குறித்து திருப்புவனம் காவல் நிலையத்தில் உள்ள ஆவணங்கள் குறித்தும், ஒரே நேரத்தில் சிபிஐ அதிகாரிகள் இரண்டு குழுக்களாக விசாரணை நடத்தினர். வழக்கு தொடர்பான தகவல்கள் மற்றும் விசாரணையை உறுதி செய்யும் CROSS CHECK தகவல் சரிபார்ப்பு விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















