(Source: ECI/ABP News/ABP Majha)
அரசு மருத்துவமனையில் எலி கடித்தவருக்கு 25 ஆயிரம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
எலி கடித்த விவகாரத்திலும் மனுதாரர் இழப்பீடு பெற தகுதியானவரே. எனவே, மனுதாரருக்கு சுகாதாரத் துறை முதன்மை செயலர் 25 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும்’’
அப்போது எனது இடது முழங்காலில் எலி கடித்தது. இதற்கு வெளிநோயாளியாக சிகிச்சை பெற்றேன். அரசு மருத்துவமனையில் எலிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு மருத்துவமனையை முறையாக பராமரிக்காததால் தான் எலிகள் கடிக்கும் நிலை உருவானது. இதனால், எனக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடாக 2 லட்சம் வழங்குமாறு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
களிமண் எடுக்க தமிழக அரசு தடை - தஞ்சையில் தந்தூரி அடுப்பு தொழில் கடும் பாதிப்பு
இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ‘‘ஜனவரி 23ஆம் தேதி எலி கடித்தது குறித்து அப்போதே மருத்துவர்களின் கவனத்திற்கு கொண்டு வரவில்லை. மாறாக 31 ஆம் தேதி தான் சிகிச்சை பெற்றுள்ளார். எலி கடித்ததற்கான காயங்கள் இல்லை. மருத்துவமனை ஆலோசனைக் குழு அவ்வப்போது மருத்துவமனையின் சுகாதாரம் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்கிறது. மனுதாரர் வேண்டுமென்றே கூறுகிறார்’’ என கூறப்பட்டது.
திருவாரூரில் முன் விரோதம் காரணமாக கட்டdaத் தொழிலாளிக்கு கத்திகுத்து
இதையடுத்து நீதிபதி, மருத்துவமனையின் தூய்மை மற்றும் சுகாதாரம் அவர்களால் பராமரிக்கப்படுகிறது. எதிர்பாராத விபத்து ஏற்படும் போது அதற்கு இழப்பீடு தானாகவே பின்னர் வழங்கப்படுகிறது. இதைப்போல எலி கடித்த விவகாரத்திலும் மனுதாரர் இழப்பீடு பெற தகுதியானவரே. எனவே, மனுதாரருக்கு சுகாதாரத் துறை முதன்மை செயலர் 25 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.