மேலும் அறிய
Advertisement
போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாக புகார்.. தனுஷூக்கு மதுரை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
தனுஷ் போலி ஆவணங்களை தாக்கல் செய்ததாக கதிரேசன் அளித்த புகார் அடிப்படையிலான வழக்கில், தனுஷூக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தனுஷ் தனது மகன் என கூறி கதிரேசன் என்பவர் தொடர்ந்த வழக்கில், தனுஷ் போலி ஆவணங்களை தாக்கல் செய்ததாக புகார் அளித்தார். அதை விசாரிக்கக் கோரிய வழக்கில், தனுஷூக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் குற்றவியல் சீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி, நடிகர் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் போலியான ஆவணங்கள் இருப்பதாக நான் அளித்த புகாரின் அடிப்படையில், முறையாக விசாரித்து, இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 6 வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.
தனுஷ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறப்பு சான்றிதழின் உண்மைத்தன்மையை அறியும் விதமாக, கீழமை நீதிமன்றம் மதுரை மாநகராட்சிக்கு அனுப்பியது. ஆனால் அதன் முடிவுகள் இதுவரை வழங்கப்படாத நிலையில், அதனை கருத்தில் கொள்ளாமல் நீதித்துறை நடுவர் வழக்கைத் தள்ளுபடி செய்தது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டதாக சொல்லப்படும் ஆவணங்கள் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிப்பது தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்த நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, மீண்டும் வழக்கை முறையாக விசாரிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர் தனுஷுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கினை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். இதனால், இந்த வழக்கில் மீண்டும் சர்ச்சை கிளம்பி இருக்கிறது.
பிற முக்கியச் செய்திகள்:
⚡️ “தஞ்சாவூர் அருகே தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழப்பு” #TanjoreFireAccident #Tanjore #Accident #Thanjavur https://t.co/lvc2AJXB2K
— ABP Nadu (@abpnadu) April 27, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion