மேலும் அறிய

Madurai: “கோயிலுக்குள் அரசியல்; உண்டியல் பணம் எங்க போகுது?” - அமைச்சர் சேகர்பாபுவை வெளுத்துவாங்கிய மதுரை ஆதீனம்

”இந்து அறநிலையத்துறையை கலைத்துவிட வேண்டும், ஆன்மீகத்தை திருடிக் கொண்டு திராவிடம் என சொல்கிறார்கள்” எனவும் மதுரை ஆதீனம் பேச்சு.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் விசுவ ஹிந்து பரிஷத் துறவியர் மாநாடு நடைபெற்றது. இதில் மதுரை ஆதீனம், கோவை காமாட்சிபுர ஆதீனம், மன்னார்குடி ஜீயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மதுரை ஆதீனம்..,” பாரதியார் தற்பொழுது இருந்திருந்தால் செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப டாஸ்மாக் வந்து பாயுது காதினிலே என்று பாடியிருப்பார். அதீனங்கள் அரசியல் பேச கூடாது என்கிறார்கள், அரசியலை நாங்கள் பேசாமல் யார் பேசுவது? அரசியல்வாதிகளுக்கு கோயிலுக்குள் என்ன வேலை அரசியல்வாதிகள் கோயிலுக்குள் தர்க்காராக வந்து இருந்து கொள்கிறார்கள். கோயிலுக்குள் அரசியல் புகுந்துவிட்டது. ஆன்மீகவாதிகள் ஏன் அரசியல் பேச கூடாது, திருக்கோவில் சொத்துக்கள் தொலைந்து போகிறது. தமிழகத்தின் பண்பாடு கலாச்சாரம் திருக்கோயிலுக்குள் உள்ளது.

Madurai: “கோயிலுக்குள் அரசியல்; உண்டியல் பணம் எங்க போகுது?” - அமைச்சர் சேகர்பாபுவை வெளுத்துவாங்கிய மதுரை ஆதீனம்
 
திராவிட பாரம்பரிய என்று சொல்லும் அரசியல்வாதிகள் விபூதி பூச மறுக்கிறார்கள். ஆனால் ரம்ஜான் என்றால் குல்லா போட்டுக்கொள்கிறார்கள். இந்துக்களை அவமதிக்கும் வகையில் திரைப்படத்தில் பேசிய நடிகர் விஜய் திரைப்படத்தை  பார்க்கவேண்டாம். கடவுளை இழிவுபடுத்தி பேசுபவர்களை எதிர்த்தால் என்னை சங்கி என சொல்கிறார்கள். சாலமன் பாப்பையாவை பல்லக்கில் தூக்கும் போது தருமபுரம் ஆதீனத்திற்கு ஏன் பல்லக்கு தூக்க கூடாது. தற்பொழுது சாமி வருவது போல் உண்டியல் வருகிறது. இந்து அறநிலையத்துறை கோயில் உண்டியலில் காசு போடாதீர்கள், அந்தந்த கோயிலுக்கு செல்வதில்லை. உண்டியல் பணம் வேறு எங்கோ செல்கிறது. 

Madurai: “கோயிலுக்குள் அரசியல்; உண்டியல் பணம் எங்க போகுது?” - அமைச்சர் சேகர்பாபுவை வெளுத்துவாங்கிய மதுரை ஆதீனம்
திராவிட பூமி என்று சொல்லிக்கொண்டு இறந்தவர்களுக்கு பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள். கோயில் நம்மைவிட்டு போனால் நமது சமயமும் நம்மை விட்டு போய்விடும். கோயில் இடங்களை ஆளும் கட்சியினரும் எதிர் கட்சியினரும் எடுத்து கொண்டு  குத்தகை கேட்டால் குத்துவதற்கு கை வருகிறது. ஆன்மீகத்தை திருடி கொண்டு திராவிடம் என சொல்கிறார்கள்  திராவிடர் என்பதற்கு அர்த்தம் என்ன என  சீமான் கேட்ட கேள்விக்கு தற்பொழுது வரை யாரும் பதில் சொல்லவில்லை 

Madurai: “கோயிலுக்குள் அரசியல்; உண்டியல் பணம் எங்க போகுது?” - அமைச்சர் சேகர்பாபுவை வெளுத்துவாங்கிய மதுரை ஆதீனம்
கோயில்களில் குத்தகை மற்றும் வாடகை பாக்கி கொடுக்க மறுப்பவர்கள் அடுத்த பிறவியில்  வெளவாலாக பிறப்பார்கள். அறநிலைய துறை பொல்லாத துறையாக உள்ளது. அறநிலையதுறை அதிகாரிகள் விபூதி பூசுவதில்லை, கோயிலில் என்ன நடக்கிறது என்பதே அவர்களுக்கு தெரிவதில்லை. நகையை உருக்குவதாக கூறுகிறார்கள் எங்கு உருக்குகிறார்கள் என தெரியவில்லை. அரசியல்வாதிகளின் கொள்ளை கூடாராமாக  திருக்கோயில்கள் உள்ளது. அறநிலையத்துறை கலைத்துவிட வேண்டும், கோயில்கள் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், ஊர் பெரியவர்கள் முன்னிலையில் இயங்க வேண்டும். சாமியார்கள் யாசகம் பெற்று  சாப்பிட வேண்டும் என கூறிய மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் என்னுடன் ஒரு வாரம் தங்கி இருந்தால் சுருண்டு போய் விடுவார். இலவசமாக கோவணமும் திருவோடும் கொடுக்கும் திட்டத்தை மட்டும் பாக்கி வைத்துள்ளது திராவிட கட்சிகள்” என்றார்.

Madurai: “கோயிலுக்குள் அரசியல்; உண்டியல் பணம் எங்க போகுது?” - அமைச்சர் சேகர்பாபுவை வெளுத்துவாங்கிய மதுரை ஆதீனம்
 
மாநாட்டில் மன்னார்குடி ஜீயர் பேசியபோது...” மதம் மாறியவர்கள் அனைவரும் தேச துரோகிகள். ஹிந்து விரோதமாக யார் பேசினாலும் எல்லா விதத்திலும் அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். பாகிஸ்தான் பங்களாதேஷ் நாடுகளில் உள்ளவர்கள் அனைவரும் ஹிந்துக்கள். அகண்ட பாரதத்தில் பாகிஸ்தான் பங்களாதேஷும் உள்ளது, அவர்களை மீண்டும் இந்துக்களாக மாற்றி ஹிந்து ராஷ்டிரியம் அமைக்க வேண்டும்” என்றார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
"தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! 
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! அதிர்ச்சி வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Issue : 15 வழக்குகள்...திமுக நிர்வாகி!RAPIST ஞானசேகரனின் பின்னணி!யார் யாருடன் தொடர்பு?RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
"தமிழ் மொழியை கற்கும் ஆர்வம் அதிகரிப்பு" பெருமையாக சொன்ன பிரதமர் மோடி!
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
PMK Issue: நேற்று மோதல்; இன்று சமரசம்; ராமதாஸ் உடன் அன்புமணி பேசியது என்ன?
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! 
தென் கொரியாவை உலுக்கிய கோர விபத்து - விமானத்தில் பயணித்த 181 பேரில் 177 பேர் பலி! அதிர்ச்சி வீடியோ
"நியூ இயர் கொண்டாட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது" கறாராக சொன்ன டி.கே. சிவகுமார்!
சட்டம் - ஒழுங்குக்கு அர்த்தமே தெரியாத மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் எல்.முருகன் காட்டம்
சட்டம் - ஒழுங்குக்கு அர்த்தமே தெரியாத மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் எல்.முருகன் காட்டம்
செய்யாருக்கு குட் நியூஸ்.. மாறும் திருவண்ணாமலை.. களத்துக்கு வந்த முக்கிய நிறுவனம்..!
செய்யாருக்கு குட் நியூஸ்.. மாறும் திருவண்ணாமலை.. களத்துக்கு வந்த முக்கிய நிறுவனம்..!
மூன்றாவது குழந்தையும் பெண்! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!
மூன்றாவது குழந்தையும் பெண்! மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்! அதிர்ச்சியில் மகாராஷ்டிரா!
Embed widget