மேலும் அறிய
Advertisement
தீபாவளி ஸ்வீட்ஸில் செயற்கை வண்ணம் சேர்க்கக்கூடாது - மதுரையில் உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை
தீபாவளி ஸ்வீட்ஸ் வாங்கும் போது ஏதாவது குறைபாடு இருந்தால் பாதிக்கப்பட்டோர் 9444042322 அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தரலாம். வாட்ஸ் அப் மூலம் தகவலை பகிரலாம் என்றார்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டடத்தில் வைத்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜெயராம் பாண்டியன் தலைமையில் ஸ்வீட்ஸ் கடை உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 100 க்கும் மேற்பட்ட ஸ்வீட்ஸ் கடை உரிமையாளர்கள் கலந்து கொண்ட இந்த ஆலோசனை கூட்டத்தில் ஸ்வீட்ஸ் கடை உரிமையாளர்களுக்கு பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டது.
முக்கியமாக ஆர்.சி மற்றும் லைசன்ஸ் ஆகியவற்றை கண்டிப்பாக வைத்து இருக்க வேண்டும். உணவு பொருளை பார்சல் செய்வோர் அதற்கான அங்கீகரிக்கப்பட்ட லேபிள்களை பயன்படுத்த வேண்டும். அதில் உணவு தயாரிப்பு தேதி, காலாவதியான நாள் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருப்பது அவசியம். உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகளை மீறி வணிகத்தில் ஈடுபடுவோருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. உணவுப் பொருட்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக 'கலரிங்' சேர்க்கக் கூடாது. இது நுகர்வோர்களுக்கு கேன்சர் உள்ளிட்ட பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai: “ஜெயலலிதா செய்ததை ஸ்டாலின் செய்ய தயங்குவது ஏன்? இது தலைமைக்கு அழகல்ல” - செல்லூர் ராஜூ
அதோடு அதிரடியாக கடைகளில் சோதனைகள் நடத்தப்பட உள்ளன. உணவு தயாரிப்பு கூடங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்துபவர் கடைக்கு சீல் வைக்கப்படும் எனவும் கூறினார். தீபாவளி ஸ்வீட்ஸ் வாங்கும் போது ஏதாவது குறைபாடு இருந்தால் பாதிக்கப்பட்டோர் 9444042322 அலைபேசி என்னில் தொடர்பு கொண்டு புகார் தரலாம். வாட்ஸ் அப் மூலம் தகவலை பகிரலாம் என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion