மேலும் அறிய
ஓபிஎஸ்-டிடிவி கூட்டணி அவசியம்! விஜய் அரசியல், திமுக பயம், தேர்தல் வியூகம் அம்பலம் - அண்ணாமலையின் முழு பேட்டி !
ஓபிஎஸ் மற்றும் டிடிவி கூட்டணியில் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் இருவரிடமும் தொலைபேசியில் பேச வாய்ப்பு கிடைக்கும்போது அதைத்தான் சொல்கிறேன்.

அண்ணாமலை
கட்சித் தலைவர் மக்களை வீக் எண்டில் தான் பார்ப்பேன் என்றால் எந்தளவுக்கு சீரியஸாக அரசியல் காலத்தை எடுத்துக் கொள்கிறார்கள் என்ற கேள்விக்குறி மக்கள் வைக்கிறார்கள். - தவெக குறித்து அண்ணாமலை பேட்டி
சர்ச்சை இல்லை
மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது...,” ஓ.பி.எஸ் - டி.டி.வி.தினகரன் இருவரும் கூட்டணியில் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இருவரிடமும் தொலைபேசியில் பேச வாய்ப்பு கிடைக்கும்போது அதைத்தான் சொல்கிறேன். டிடிவி அண்ணனிடம் இதைதான் வலியுறுத்திருக்கிறேன். கிருஷ்ணசாமி மற்றும் ஜான்பாண்டியன் இருவரும் வெளியிட்டு இருக்கக்கூடிய பத்திரிக்கை குறிப்பை பார்த்தேன் அவர்கள் தரப்பிலிருந்து கருத்து சொல்லி இருக்கிறார்கள். அது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. பாஜகவின் நிலைப்பாடு முத்துராமலிங்கத் தேவர் ஐயாவை கடவுளாக நினைக்கிறோம். எப்பொழுதும் அவருக்கு அந்த மரியாதை கொடுக்கிறோம். இமானுவேல் சேகரன் அய்யாவின் நினைவு நாளுக்கு செல்கிறோம். நானும் செல்கிறேன் எங்களை பொறுத்தவரையில் இதில் எதுவும் சர்ச்சை இல்லை.
கட்சித் தலைவர் மக்களை வீக் எண்டில் தான் பார்ப்பேன்
சகோதரர் விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார். மதுரையில் மாநாடு நடத்தியிருக்கிறார். 24 மணி நேரம் செய்யக்கூடியது தான் கவர்னன்ஸ் பாலிடிக்ஸ். கட்சி தலைவராக 24 மணி நேரமும் இருக்க வேண்டும். தமிழக மக்கள் எதிர்பார்ப்பது தமிழக வெற்றிக்கழகம் தங்களை ஒரு சீரியசான கட்சி என்று சொல்கிறார்கள் அதே வேகத்தை 24 மணி நேரம் பார்க்க வேண்டும். சனிக்கிழமை மட்டும் மக்களை பார்ப்பேன், ஞாயிற்றுக்கிழமை மட்டும் மக்களை பார்ப்பேன் வார நாட்களில் பார்க்க மாட்டேன் என்பது புதிதாக வந்திருக்க கூடிய அரசியல் கட்சிக்கு. திமுகவுக்கு எதிரி என்று தமிழக வெற்றி கழகம் பறை சாற்றினால் அந்த வேகத்தை களத்தில் கட்ட வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியை முழுமையாக மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால் பெண் தலைவர்கள் முழு நேரமாக வேலை பார்க்கிறார்கள். கட்சித் தலைவர் மக்களை வீக் எண்டில் தான் பார்ப்பேன் என்றால் எந்தளவுக்கு சீரியஸாக அரசியல் காலத்தை எடுத்துக் கொள்கிறார்கள் என்ற கேள்விக்குறி மக்கள் வைக்கிறார்கள்.
நீதிமன்றத்திற்கு செல்லலாம்
காவல் துறையைப் பொறுத்தவரை தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டும் அனுமதி மறுப்பதாக சொல்கிறார்கள். நாங்கள் யாத்திரையில் நடத்தும் போதும் அனுமதி மறுத்தார்கள், எதிர்க்கட்சியாக இருப்பது அதற்கு இதுபோன்ற எதிர்ப்புகள் வரும். அப்படி காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்திற்கு செல்லலாம். தமிழக வெற்றி கழகத்தை பார்த்து திமுக எப்போது பயப்படும் என்றால் முழுமையாக அரசியல் களத்திற்கு வந்தால் தான். ஒரு இடத்தில் அனுமதி கொடுக்கவில்லை என்றால் அரை கிலோமீட்டர் தள்ளி வையுங்கள் மக்கள் வருவார்கள்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
இந்தியா
கிரிக்கெட்
Advertisement
Advertisement





















