மேலும் அறிய
Advertisement
"மதுரை அ.தி.மு.க., மாநாடு கின்னஸ் சாதனை மாநாடாக அமையும்" - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
அதிமுக மாநாடு கின்னஸ் சாதனை மாநாடாக அமையும். இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் அதிமுகவின் மாநாடு நடைபெறும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி.
மதுரையில் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெற உள்ள அதிமுகவின் பொன்விழா மாநாட்டு நிகழ்வுக்கு காவல்துறை அனுமதி கோரும் வகையில் மதுரை நத்தம் பறக்கும் பாலம் பகுதியில் உள்ள மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் மதுரை காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத்திடம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் அனுமதி கோரி மனு அளித்தனர். மதுரை விமான நிலையம் அருகில் உள்ள வளையங்குளம் திடலில் அதிமுக மாநாட்டுக்கு அனுமதி கோரி காவல் கண்காணிப்பாளரிடம் அதற்கான வரைபடத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ காண்பித்து அனுமதி கோரியதோடு, வரைபடத்தை காண்பித்த மாநாடு நடைபெறும் இடம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எடுத்துரைத்தார்.
தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில்,"அதிமுகவை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வழி நடத்தி வருகிறார். இந்தியாவுக்கே முன்னுதாரணமாக திகழ்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆகஸ்ட் 20 ஆம் தேதி அதிமுக மாநாடு மதுரையில் நடைபெறுகிறது. மதுரையில் வளையங்குளம் அருகே மிகப்பெரிய அளவில் மாநில மாநாடு நடைபெறுகிறது. மாநாடு நடத்த அனுமதிக்க கோரியும், பாதுகாப்பு அளிக்க கோரியும் மாவட்ட எஸ்.பி யிடம் மனு அளிக்கப்பட்டது. காவல்துறை காலம் தாழ்த்தாமல் விரைவாக அனுமதி வழங்க வேண்டும், அப்போது தான் மாநாடு வேலைகளை தொடங்க முடியும். இந்தியாவில் இதுவரை நடக்காத அளவிற்கு அதிமுக மாநாடு நடத்தப்படும். கின்னஸ் சாதனையில் இடம் பிடிக்கும் மாநாடாக அதிமுக மாநாடு அமையும்.
இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் மாநாடு அமையும். மாற்று கட்சியினர் பாராட்டும் வகையில் மாநாடு நடத்தப்படும். மதுரையில் நடைபெறும் மாநாட்டில் 50 லிருந்து 60 இலட்சம் அதிமுக தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். மாற்றுக்கட்சியினர் மாற்று அணி நடத்திய மாநாட்டை விட பெரிய அளவில் பிரம்மாண்டமாக அதிமுக மாநாடு நடக்கும்" என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - காளையார் கோவில் பாண்டியன் கோட்டையில் முன்னுரிமை அடிப்படையில் அகழாய்வு ? - அமைச்சர் கவனத்திற்கு சென்ற கோரிக்கை
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion