பசங்க பட ஹீரோவிற்காக காத்திருந்த சின்ன பசங்க.. ஓடோடி வந்து செல்ஃபி - நெகிழ்ச்சியில் உறைந்த மதுரை!
நடிகர் விமல் தன்னை பார்ப்பதற்காக நின்று கொண்டிருந்த பசங்களுக்காக இறங்கி வந்து செல்பி எடுத்துக் கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பசங்க பட ஹீரோவிற்காக காத்திருந்த பசங்க, விமல் அண்ணேன் உங்க கூட போட்டோ எடுக்கனும் வாங்க என அழைத்த பசங்களை தேடிவந்து செல்பி எடுத்த நடிகர் விமல் - உற்சாகத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சிறுவர்கள்.
கல்லூரி நிகழ்ச்சியில் நடிகர் விமல்
மதுரை உத்தங்குடி பகுதியில் நடைபெற்ற தனியார் பாரா மெடிக்கல் கல்லூரியின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் நடிகர் விமல் கலந்துகொண்ட பின்னர் நிகழ்ச்சி முடிவடைந்த கல்லூரியில் இருந்து நடிகர் விமல் காரில் புறப்பட்டார். அப்போது நிகழ்ச்சி நடைபெற்ற கல்லூரி வாசல் பகுதியில் நின்று கொண்டிருந்த ஏராளமான சிறுவர்கள் மற்றும் பெண்கள் நடிகர் விமலை பார்த்தவுடன் அண்ணேன் விமல் அண்ணேன் உங்க கூட போட்டோ எடுக்கணும் இங்க வாங்கனே என அழைத்தனர். இதனை கேட்ட நடிகர் விமல் சற்றும் யோசிக்காமல் உடனடியாக அங்கிருந்து வந்து தனக்காக நின்று கொண்டிருந்த சிறுவர், சிறுமியர்களுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
பொங்கல் வாழ்த்து தெரிவித்த விமல்
தொடர்ந்து அங்கு நின்றுகொண்டிருந்த பெண்கள் மற்றும் பொதுமக்களுடன் சேர்ந்தும் செல்பி எடுத்துக்கொண்டபடி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். நாங்கள் நடிகர் விமலுடன் போட்டோ எடுப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என கூறிய பொதுமக்கள் விமல் தேடி வந்து புகைப்படம் எடுத்துக் கொண்டவுடன் ரொம்ப சந்தோசமாக இருக்கிறது என தெரிவித்தனர். பசங்க படத்தின் ஹீரோவான நடிகர் விமல் தன்னை பார்ப்பதற்காக நின்று கொண்டிருந்த பசங்களுக்காக இறங்கி வந்து செல்பி எடுத்துக் கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.





















