மேலும் அறிய
கோயிலுக்கு வந்த 14 வயது சிறுமி: காவல் உதவி ஆய்வாளர் செய்த காரியம்! - போக்சோவில் கைது
உதவி ஆய்வாளர் ஜெயபாண்டியின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ஜெயபாண்டி
Source : whats app
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத்தின் போது, கோயில் திருவிழாவிற்கு வந்த 14 வயது சிறுமியை, கோயில் கூடுதல் பணிக்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
திருப்பரங்குன்றம் கோயில்
முருகனின் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விசேஷ நாட்களில் சொல்லவே வேண்டாம், மக்கள் வெள்ளம் போல் முருகனை தரிசிக்க வருவார்கள். அதுவும் தீப திருநாள் அன்று குன்றத்தின் ஏற்றப்படும் ஜோதியை காண ஏராளமான நபர்கள் திரண்டு இருப்பார்கள். இப்படியாக கார்த்திகை தீபத்தின் போது கோயில் திருவிழாவிற்கு வந்த14 வயது சிறுமியை கோயில் கூடுதல் பணிக்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களை காக்க வேண்டிய போலீஸ் அதிகாரி இப்படி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உதவி ஆய்வாளர் செய்த பாலியல் வன்கொடுமை
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத்தின் பொழுது பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதைக்கு வருவார்கள். பக்தர்கள் பாதுகாப்புக்காக கூடுதலாக போலீசார் பல்வேறு காவல் நிலையங்களில் இருந்து கூடுதலாக பணியமர்த்தப்படுவார்கள். சம்பவத்தன்று திடீர் நகர் காவல் நிலையத்தை சார்ந்த குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் ஜெயபாண்டியன் திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பொழுது சாமி தரிசனத்திற்கு வந்த 14 வயது சிறுமி கிரிவலப் பாதையில் உள்ள கழிவறைக்குச் செல்லும் பொழுது பின் தொடர்ந்து சென்ற உதவி ஆய்வாளர் ஜெயபாண்டியன் 14 வயது சிறுமி என்றும் பாராமல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
கழிவறைக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
கழிவறைக்கு சென்ற சிறுமி நீண்ட நேரம் வராததால் கழிவறைக்கு சென்று பார்த்த பெற்றோர் சிறுமி மயங்கி இருந்த நிலையில் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து சைல்ட் லைனில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரும், சைல்ட் லைன் அதிகாரிகளும் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில் மேற்கண்ட குற்றவாளி உதவி ஆய்வாளர் ஜெயபாண்டி கழிவறைக்கு சென்ற தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் ஜெயபாண்டியனிடம் போலீசார் நடத்தை விசாரணையில் உதவி ஆய்வாளர் ஜெயபாண்டியின் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு (10,9(a)(ii).9(a)(ii), 9(m) - POCSO Act) பணியிட நீக்கம் செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைத்தனர். பொதுமக்களை காக்க வேண்டிய போலீஸ் அதிகாரி இப்படி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - புற்றுநோய்கள் பல்வேறு வகையில் மாறினாலும், அதற்கான சிகிச்சையும் மேம்பட்டுள்ளது - டாக்டர்கள் பெருமிதம்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்ததா அதிமுக? ஜகா வாங்கும் இபிஎஸ்! மீட்டிங்கில் நடந்தது என்ன?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
கல்வி
க்ரைம்
Advertisement
Advertisement