மேலும் அறிய
Advertisement
Madurai: 3 நாட்களில் மதுரை மண்டலத்தில் 100 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
சட்டத்திற்கு புறம்பாக ரேஷன் அரிசி கடத்தி பதுக்கும் நபர்கள் மற்றும் அரிசியை அரைத்து பதுக்கி வைத்திருக்கும் குடோன்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 4ம் தேதி முதல், 6ம் தேதி வரை மதுரை மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சினேகப் பிரியா தலைமையில் மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் 100 டன் ரேஷன் புழுங்கல் அரிசியானது கைப்பற்றப்பட்டு உள்ளது.
#madurai | 3 நாட்களில் மதுரை மண்டலத்தில் 100 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனய்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
— arunchinna (@arunreporter92) November 7, 2022
Further reports to follow @abpnadu@SRajaJourno | @LPRABHAKARANPR3 | @jp_muthumadurai | @Hariindic | @MaFoiLatha |..... pic.twitter.com/XGMp1V67gu
மேலும், ரேஷன் அரிசி கடத்தலுக்கு தொடர்பான 17 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் கடத்தலுக்கு துணை போகும் நபர்கள் மற்றும் ரேஷன் அரிசியை பதுக்கும் குடோன்களை அனைத்து மாவட்டங்களிலும் உடனடியாக ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து ஆய்வாளர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
சட்டத்திற்கு புறம்பாக ரேஷன் அரிசி கடத்தி பதுக்கும் நபர்கள் மற்றும் அரிசியை அரைத்து பதுக்கி வைத்திருக்கும் குடோன்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Pugar Petti : சீர்செய்யப்படாத கால்வாய்..! ஊருக்குள் புகுந்த கண்மாய் தண்ணீர்..! தீர்வுதான் எப்போது..?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
தமிழ்நாடு
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion