Sivagangai : திறந்த வெளி சிறைச்சாலையில் ஆயுள் கைதி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
சிவகங்கை திறந்த வெளி சிறைசாலையில் ஆயுள் கைதி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு. இதனால் சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி, இவர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா காவல் நிலைய வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே புரசடை உடைப்பு திறந்த வெளிச் சிறை சாலை ஆயுள் கைதியாக இருந்து வருகிறார்.
#Abpnadu | சிவகங்கை திறந்த வெளி சிறைசாலையில் ஆயுள் கைதி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு. தூத்துக்குடியை சேர்ந்த கருப்பசாமி மின் கம்பத்தில் அருகே சென்று காவல்துறையினரை மிரட்டிய போது எதிர்பாரத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தாக கூறப்படுகிறது.#sivagangai @vignesh354 @LPRABHAKARANPR3 pic.twitter.com/cgpBuVWx2p
— Arunchinna (@iamarunchinna) March 22, 2022
இந்நிலையில் கருப்பசாமி சிறைச் சாலையில் காவலர்களை மிரட்டுவதற்காக மின் கம்பத்தில் உள்ள கம்பியை பிடித்துவிடுவேன் என மிரட்டியதாகவும். அப்போது எதிர்பாராத விதமாக கைதி கருப்பசாமி தலையில் மின்கம்பம் பட்டபோது அவர் மீது உயர்மின் அழுத்தம் பரவியதாக கூறப்படுகிறது. அப்போது விபத்து ஏற்பட்ட கரும்பசாமி மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து தகவலறிந்த சிறை காவலர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக காளையார்கோவில் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் ஆயுள் கைதி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் ‘ - Sachin Shiva : வங்கதேசத்திற்கு செல்லும் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் சச்சின் சிவா.. உற்சாகப்படுத்தி உதவிய மதுரை ஆட்சியர்..
இது குறித்து காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கையில், நான் கரண்டை பிடித்து செத்துவிடுவேன், கருண்டு கம்பியை பிடிக்க, பிடிக்கவா என கருப்பாசாமி மிரட்டியுள்ளார். அப்போது தலைப்பகுதியில் எதிர்பாரத விதமாக மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து கீழே விழுந்தார். அவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயெ இறந்துவிட்டார். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த கருப்பசாமி மின்சாரம் தாக்கி இறந்தாக கூறப்படும் நிலையில் அவரது உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் மின்சாரத்தை பாய்ச்சி உயிரிழக்கும் சூழல் ஏற்படும் வகையில் செயல்பட்டுள்ளனரா என உயிர் அதிகாரிகள் விசாரணை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
’இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ்’ - திட்டங்களை செயல்படுத்துவதில் ஒரு அரசுபோல இன்னொரு அரசு இருக்கமுடியாது' - ஆளுநர் தமிழிசை !