மேலும் அறிய
Advertisement
தென்காசி: குருத்திகாவை 2 நாட்கள் காப்பகத்தில் வைத்து வாக்குமூலம் பெற வேண்டும் - நீதிமன்றம் உத்தரவு
குருத்திகா-வை இரண்டு நாட்கள் காப்பகத்தில் வைத்து வாக்கு மூலம் பெற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தென்காசி மாவட்டம் கொட்டாகுளத்தைச் சேர்ந்த மாரியப்பன் வினித் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "தென்காசி அருகே கொட்டாகுளம் இசக்கியம்மன் கோயில் தெருவில் வசித்து வருகிறேன் சென்னையிலுள்ள தனியாா் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பாா்த்து வருகிறேன் இலஞ்சி தென்றல் நகரைச் சோ்ந்தவா் நவீன்பட்டேல், இவருடைய மகள் குருத்திகாபட்டேல். நானும் குருத்திகா பட்டேலும் கடந்த 6வருடங்களாக காதலித்து வந்தோம் நாங்கள் இருவரும் கடந்த 27-12-2022 அன்று நாகா்கோவிலில் திருமணம் செய்துகொண்டோம் இதற்கு இடையில் தன்னுடைய மகளைக் காணவில்லை எனக் கூறி நவீன்பட்டேல் குற்றாலம் காவல்நிலையத்தில் புகாா் செய்தார்கள். இதனையடுத்து 4-1-23 அன்று நானும் எனது மனைவியுடன் குற்றாலம் காவல்நிலையத்தில் ஆஜராகினோம். விசாரணையின் முடிவில் குருத்திகா பட்டேல், தன்னுடைய கணவர் என்னுடன் செல்வதாகக் கூறியதையடுத்து என்னுடன் அழைத்து சென்றேன்.
இந்நிலையில் கடந்த 14ம் தேதியன்று என்னுடைய மனைவியுடன் தென்காசியில் மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு வந்த நவீன்பட்டேல் மற்றும் அவருடைய மனைவி தா்மிஸ்தா பட்டேல் என்னுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனா். இது குறித்து நான் முதல்வரின் தனிப்பிரிவில் புகாா் செய்தேன். இந்த புகாா் மனுவின் மீதான விசாரணைக்காக ஜனவரி 25 ஆம் தேதி நான் என் மனைவி, தந்தை சகோதரா் விஷால் ஆகியோருடன் குற்றாலம் காவல்நிலையத்தில் ஆஜராகினேன். ஆனால், நவீன்பட்டேல் மாலையில் காவல்நிலையம் வருவதாகக் கூறியுள்ளாா். இந்நிலையில் நான் எனது குடும்பத்தினருடன் குற்றாலம் காவல் நிலையத்தில் இருந்து காரில் கொட்டாகுளத்திற்கு சென்று கொண்டிருந்த போது, அப்போது நவீன்பட்டேல், அவருடைய மனைவி தா்மிஸ்தா பட்டேல் உள்ளிட்டோா் என்னை தாக்கி தனது மனைவி குருத்திகா பட்டேல்-லை கடத்தி சென்றனர். நான் இது குறித்து குற்றாலம் காவல்நிலையத்தில் புகாா் செய்தேன். புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், குருத்திகா பட்டேல்லை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருமணத்தை பதிவு செய்வதற்காக காத்திருந்த நேரத்தில் குருத்திகா பட்டேல் கடத்தி சென்று விட்டனர்.
எனவே, குருத்திகா பட்டேல் மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் அமர்வு முன்பு குருத்திகா பட்டேல் - லை தென்காசி காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். காவல்துறை தரப்பில், குருத்திகா பட்டேல் கடத்தப் பட்டத்தில் இரு வேறு கதைகள் உள்ளது. உண்மையை கண்டு அறிய சம்மந்தப்பட்ட பெண் குருத்திகா விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு செய்ய வேண்டும் அதன் பின்பே உண்மை தெரியவரும். இதனையடுத்து நீதிபதிகள், மனுதாரர் கல்யாணம் செய்ததற்கான ஆவணங்கள் உள்ளதா? மனுதாரரின் வயது என்ன? என்று கேள்வி எழுப்பினார். மனுதாரர் தரப்பில், மனுதாரருக்கு 22 வயது, கல்யாணம் நடந்ததற்கான புகைப்படம் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், குஜராத்தில் திருமணம் செய்த மைத்திரிக் பட்டேல் கைது செய்யப்பட்டாரா? காவல் துறை தரப்பில், தலை மறைவாக உள்ளார் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், கடந்த அக்டோபர் மாதம் மைத்திக் உடன் திருமணம் நடந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. மனுதாரர் மாரியப்பன் வினித் திருமண புகைப்படங்கள் காட்டி குருத்திகாவிடம் நீதிபதிகள் விசாரணை செய்தனர்.
அதன்பின்பு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்
குருத்திகா வழக்கில் தனிப்பட்ட முறையில் செல்வாக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. குற்றம் நடந்தத் காண சாட்சியங்களை விசாரணை செய்ய வேண்டும். குருத்திகா-வை இரண்டு நாட்கள் காப்பகத்தில் வைத்து வாக்கு மூலம் பெற வேண்டும். குருத்திகா-வின் பாதுகாப்பு மிக முக்கியம். பெற்றோர் குருத்திகா-வை பார்க்க அனுமதிக்க வேண்டும். பெற்றோர் கட்டாயப்படுத்தாத வண்ணம் பாதுகாப்பு வழங்க வேண்டும். விசாரணை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என கூறி பிப்ரவரி 13 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion