மேலும் அறிய
Advertisement
Keezhadi excavation: விரைவில் திறக்கப்படும் கீழடி அகழ்வைப்பக கட்டடம்
தெப்பம், கல் மண்டபம் என பாரம்பரிய முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் கீழடி அகழ்வைப்பகம் விரைவில் திறக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
கீழடியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வு பணி தொடங்கி 2 மற்றும் 3 கட்ட அகழாய்வு என மூன்று கட்டங்களை மத்திய தொல்லியல் துறையும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 4, 5, 6, 7, 8 உள்ளிட்ட அகழாய்வு பணிகளை தமிழ்நாடு தொல்லியல் துறையும் மேற்கொண்டனர். கீழடி, பகுதிகளில் நடைபெற்று வந்த 8-ஆம் கட்ட அகழாய்வு பணியானது கடந்த செப்டம்பர் மாதத்தில் முடிவடைந்தது. தற்போது வரை நடைபெற்று முடிந்த அகழாய்வு மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டன.
இந்நிலையில் கீழடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் கண்டறியப்பட்ட பொருட்களை பாதுகாக்கும் வகையிலும் காட்சிப்படுத்தும் வகையில் கீழடி அருகே உள்ள கொந்தகையில் அகழ்வைப்பகத்திற்கு 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு 11 கோடி 3 லட்சம் மதிப்பிலான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதில் தற்போது அகழாய்வுப் பணியில் கண்டறியப்பட்ட பொருட்களை காட்சிப்படும் பொருட்களை வைக்கும் இடங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த இடங்களில் தந்தத்தில் செய்யப்பட்ட பொருட்கள், சுடுமண் பொருட்கள், இரும்பு பொருட்கள், நெசவு பொருட்கள், அலங்கார பொருட்கள், தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்கள் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு பகுதியில் வைக்கப்பட உள்ளது.
இந்த அகழ்வைப்பக கட்டிடம் காரைக்குடி கட்டிடகலையை மெய்பிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. தேக்கு மர கதவு, ஜன்னல், கண்ணாடி கூரைகள், ஆத்தங்குடி டைல்ஸ், மர பொருட்களை பிரதிபலிக்கும் அழகிய விளக்குகள் என பல்வேறு பொருட்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல் நான்கு மாடங்களில் உட்கார்ந்து ரசிக்கும் வகையில் தெப்பம், கல் மண்டபம் என பாரம்பரிய முறையில் அமைக்கப்பட்டுள்ளது. வெயில் காலத்திலும் சீதோசன நிலையை தாங்கும் வகையில் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதே போல் தொல்லியல் பொருட்களின் தன்மை மற்றும் நிறங்கள் மாறாத வண்ணம் பொருட்கள் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எழில் கொஞ்சும் கீழடி அகழ்வைப்பகம் விரைவில் திறக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Physically Disabled Cricket: திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டி: ஒரு நாள் தொடரை கைப்பற்றியது பங்களாதேஷ்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
தொலைக்காட்சி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion