மேலும் அறிய
கன்னியாகுமரியில் இரும்பு தாது செம்மண் கடத்தல்: அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கன்னியாகுமரி மாவட்டம் ஆட்சியர், கனிம வள த்துறை இயக்குனர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

மதுரைக் கிளை
பல கோடி மதிப்புள்ள இரும்பு தாதுக்கள் நிறைந்த செம்மண் சட்ட விரோதமாக கடத்தல் கடத்தியவர்கள் அதற்கு துணை போன அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி வழக்கு.
கனிமவளம் தொடர்பாக மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லை சேர்ந்த சுனில் குமார் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு...," கருங்கல் பேரூராட்சித் தலைவர் சிவராஜன், அதிகாரிகளின் துணையோடு கருங்கல் பேரூராட்சி பகுதிகளில் சட்ட விரோதமாக இரும்பு (ஆக்சைடு) தாதுக்கள் நிறைந்த செம்மண் கடத்தி விற்பனை செய்துள்ளார். இந்த சட்ட விரோத செம்மண் கடத்தலால் அப்பகுதியில் செயற்கை பேரிடரை உருவாக்கி வருகின்றனர். எனவே தரமான சிவில் இன்ஜினியரிங் முறைகளைப் பயன்படுத்தி, எவ்வளவு அளவு செம்மண் திருடப்பட்டுள்ளது என்பதைத் துல்லியமாகக் கணக்கிட வேண்டும்.
வருவாய் மீட்புச் சட்டம் மூலம் பேரூராட்சி அதிகாரிகளிடமிருந்து மீட்க வேண்டும்
சட்டவிரோத மண் கடத்தலில் ஈடுபட்ட அதிகாரிகள், வாகன உரிமையாளர்கள் மற்றும் கடத்தப்பட்ட மண்ணை வாங்கிய நபர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் சுரங்கத்துறை விசாரணை நடத்தி, முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதோடு, கடத்தப்பட்ட மண்ணின் மதிப்பை 'வருவாய் மீட்புச் சட்டம் மூலம் பேரூராட்சி அதிகாரிகளிடமிருந்து மீட்க வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதிகள் மனுதாரர் புகார் குறித்து கனிம வளத்துறை அதிகாரிகள், கன்னியாகுமரி கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஜூலை 8ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
Before You Go
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















