மேலும் அறிய
Advertisement
கபடி போட்டியும் ஒலிம்பிக்கில் இடம்பெறும் அப்போது இந்தியா தங்கம் வெல்லும் - அண்ணாமலை
இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடக்கும் போது கபடி போட்டியும் அதில் இடம்பெறும் அப்போது இந்தியா தங்க பதக்கம் வெல்லும் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு
மதுரையில் நடைபெறும் மோடி கபடி லீக் இறுதி போட்டிக்கான தொடக்க விழா மதுரை மதுரா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடக்கும் போது கபாடி போட்டியும் அதில் இடம்பெறும் அப்போது இந்தியா தங்க பதக்கம் வெல்லும் - பாஜக மாநில தலைவர் @annamalai_k மதுரையில் பேச்சு!#madurai | #bjp | #Annamalai | @imkarjunsampath | @amarprasadreddy | @HRajaBJP pic.twitter.com/tFHKfKrEB3
— arunchinna (@arunreporter92) September 28, 2022
தொடர்ந்து மேடையில் பேசிய அண்ணாமலை..,” விளையாட்டு மூலம் அரசியல் இன்றி அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதற்காக இந்த கபடி போட்டி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடக்கும் போது கபடி போட்டியும் அதில் இடம்பெறும் அப்போது இந்தியா தங்க பதக்கம் வெல்லும். இந்த கபடி போட்டி பொதுமக்களுக்காக நடத்தப்படுகிறது. மதுரை மண்ணில் தான் இறுதிபோட்டி நடைபெறவேண்டும் என்பதற்காக இங்கு நடைபெறுகிறது. தமிழகத்தில் இதுபோன்று பிரமாண்டமாக கபடி போட்டியை யாரும் நடத்தவில்லை.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - கூவத்தூர் ஸ்டைலை கையில் எடுத்த மதுரை திமுக? மானப்பிரச்னையாக மாறும் மா.செ போஸ்ட்..!
கபடி போட்டி விளையாடுவதால் நல்ல மனிதர்களாக மாறுகின்றனர், இந்த இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசு 15 லட்சம், இரண்டாம் பரிசு 10 லட்சம், மூன்றாம் பரிசு 5 லட்சம் வழங்கவுள்ளோம், இதுவரை இந்த கபடி போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களில் 61ஆயிரம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வீட்டில் நாட்டில் என்ன பிரச்னை இருந்தாலும் விளையாட்டு போட்டியை பார்த்தால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். கபடி விளையாட்டுக்கான சென்டர் ஆப் எக்ஸ்லன்ஸ் தமிழகத்திற்கு கொண்டுவருவது எங்களது பொறுப்பு, ஒலிம்பிக் சங்க துணைத்தலைவர் சோலை ராஜாவை டெல்லி அழைத்துசென்று இதனை ஆவணம் செய்வோம் என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
கல்வி
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion