மேலும் அறிய
பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் இந்த நிலைமை ஏற்படும் - கே.பாலகிருஷ்ணன்
பா.ஜ.க ஒரு மூழ்கும் கப்பலாக தான் இருக்கும். மூழ்கின்ற கப்பல் கரை சேர முடியாது. பாஜகவுடன் - அதிமுக கூட்டணி வைத்தால் அவர்களுடன் சேர்ந்து மூழ்குகின்ற நிலைமை ஏற்படும்.

அகில இந்திய மாநாட்டில் தலைவர்கள்
Source : whats app
பாஜக எத்தனை வேஷம் போட்டாலும் கடந்த தேர்தல்களில் ஒரு இடம் கூட வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டது என கே.பாலகிருஷ்ணன் பேசினார்.
மதுரையில் மாநாடு
மதுரை தமுக்கம் மாநாட்டு மைதானத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு இன்று தொடங்கி வரும் ஏப்ரல் 6- தேதி வரை நடைபெற உள்ளது. மாநாட்டின் துவக்கமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி வெண்மணியிலிருந்து எடுத்து வரப்பட்டது, செங்கொடி படையினர் மரியாதை அளிக்கப்பட்டு, கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர் பிரகாஸ் காரத் முன்மொழிய மூத்த தலைவர் பிமான் பாசு செங்கொடியை ஏற்றித் தொடங்கி வைத்தார். இதில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் முக்கிய தலைவர் பிராகாஸ் காரத், கே.பாலா கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
பிரகாஸ் காரத் மாநாட்டில் பேச்சுகையில்
இந்துத்துவா சக்திகள் அரசியலில் ஆதிக்கம் செலுத்துவது தேர்தலுக்காக மட்டும் இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கருத்தியல், கலாச்சார மற்றும் சமூகத் துறைகளில் இந்துத்துவா சக்திகள் செலுத்தும் செல்வாக்கின் மூலம் பெறப்பட்ட ஆதிக்கம் இது. இது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு மீதான ஏதோ சதிகார தாக்குதல்கள் மூலம் செயல்படுத்தப்படும் ஆதிக்கம். மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க புதிய தாராளமயக் கொள்கைகளின் தாக்குதலை எதிர்த்து இடதுசாரி கட்சிகள் பல போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த மாநாட்டில் இந்துத்துவா வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தையும், புதிய தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தையும் ஒருங்கிணைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்துத்துவா, வகுப்பு வாதத்தை உறுதியாகவும் சமரசமின்றியும் எதிர்த்துப் போராடக்கூடிய சக்தி இடதுசாரிகளுக்கு மட்டுமே உள்ளது.
சமரசமின்றியும் எதிர்த்துப் போராடக்கூடிய சக்தி இடதுசாரிகளுக்கு மட்டுமே உள்ளது
RSS உந்துதல் மூலம் சிறுபான்மையினரை குறிவைத்து அவர்களுக்கு எதிராக பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. BJP ஆளுகின்ற மாநிலங்களின் உதவியோடு இந்துத்துவா அமைப்புகளால் நடத்தப்படும் வகுப்புவாத வன்முறையின் மூலம் சிறுபான்மையினர் குறிவைக்கப்படுகிறார்கள். இந்த மாநாட்டில் இந்துத்துவா வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தையும், புதிய தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தையும் ஒருங்கிணைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்துத்துவா, வகுப்பு வாதத்தை உறுதியாகவும் சமரசமின்றியும் எதிர்த்துப் போராடக்கூடிய சக்தி இடதுசாரிகளுக்கு மட்டுமே உள்ளது. RSS உந்துதல் மூலம் சிறுபான்மையினரை குறிவைத்து அவர்களுக்கு எதிராக பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க ஆளுகின்ற மாநிலங்களின் உதவியோடு இந்துத்துவா அமைப்புகளால் நடத்தப்படும் வகுப்புவாத வன்முறையின் மூலம் சிறுபான்மையினர் குறிவைக்கப்படுகிறார்கள்” என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில்
”தொகுதி மறுவரையறை, மொழி திணிப்பு மாநில உரிமையை பறிப்பு போன்ற தாக்குதலை எதிர்த்து தமிழக மக்கள் போராடி வருகிறார்கள். பாஜக எத்தனை வேஷம் போட்டாலும் கடந்த தேர்தல்களில் ஒரு இடம் கூட வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டது. இந்தியாவில் பாஜகவை 100 சதவீதம் வீழ்த்திய மாநிலம் தமிழ்நாடு. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பாஜக பிற கட்சிகளை மிரட்டி கூட்டணிக்கு அழைப்பதாக செய்தி வருகிறது. அதிமுக - பாஜக கூட்டணி முகாந்திரம் போல தான் செய்திகள் வருகிறது. பாஜக ஒரு மூழ்கும் கப்பலாக தான் இருக்கும். மூழ்கின்ற கப்பல் கரை சேர முடியாது. பாஜகவுடன் - அதிமுக கூட்டணி வைத்தால் அவர்களுடன் சேர்ந்து மூழ்குகின்ற நிலைமை ஏற்படும்” என பேசினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















