மேலும் அறிய

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணைக்கு தடை கோரிய வழக்கு முடித்து வைப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அரசு அமைத்துள்ள ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க கோரிய வழக்கு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணைக்கு தடை விதிக்க கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது. விசாரணை ஆணையம் விசாரணை முடித்து அறிக்கை தாக்கல் செய்து விட்டதால்  வழக்கை முடித்து வைத்து  உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
 
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த ஆணையத்தை அமைத்து அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக்கோரி தூத்துக்குடி சேர்ந்த அர்ஜூனன் உயர் நீதிமன்ற கிளையில் 2018 ஆம் வருடம் மனு தாக்கல் செய்திருந்தார்.
 
அதில், விசாரணை ஆணையம் முறைப்படி அமைக்கவில்லை. இந்த ஆணையம் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நேரடி சாட்சிகளை மட்டுமே விசாரணைக்கு அழைத்துள்ளது. இந்த ஆணையம் மே 22-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மட்டுமே விசாரிப்பதாக தெரிவித்துள்ளது. மே 23, 24 ஆகிய இரு நாட்களும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படுவதாக தெரிவிக்கவில்லை. எனவே விசாரணை ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
 
இந்த வழக்கு மகாதேவன் மற்றும் சத்ய நாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையும் விசாரணையை முடித்து தமிழ்நாடு அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டு விட்டது என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதிகள் இந்த வழக்கினை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தார்.

மற்றொரு வழக்கு

முதுநிலை மருத்துவர் பிரிவில் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.
 
மருத்துவர்கள் ஸ்ரீநந்தினி, பாக்கியராஜ், புதியசாமி, ஆனந்த் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அதில்," முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்வது தொடர்பாக தமிழக அரசு கடந்த 2020 நவம்பரில் அரசாணை ஒன்றை பிறப்பித்தது. அதன் அடிப்படையில் முதுநிலை மருத்துவ படிப்பில் 50 சதவீதம் இடங்களில் ஏற்கனவே  மருத்துவப் பணி செய்து வரும் அரசு மருத்துவர்களுக்கு 50% இடமும்,  சில முன்னுரிமைகளும் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், அரசுப்பணியில் இல்லாத மருத்துவர்கள் சிரமத்திற்கு ஆளாவர். இது சட்ட விரோதமானது. ஆகவே, முதுநிலை மருத்துவர் சேர்க்கை தொடர்பாக 2020 நவம்பரில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தனர்.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்,  "இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கும், மேல்முறையீட்டு வழக்கும் உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை மட்டுமே நடைபெற்றுள்ளது. ஆகையால் அதன் சாதக, பாதகங்கள் குறித்து முழுமையாக அறியாமல் ரத்து செய்ய இயலாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், வரும்காலங்களில் பாதிப்புகள் இருப்பின் மனுதாரர்கள் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் குறிப்பிட்டார்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Thirumavalavan: வன்னியர் சமூகத்துக்கு எதிரானதா விடுதலை சிறுத்தைகள்.. திருமாவளவன் காட்டம்!
Thirumavalavan: வன்னியர் சமூகத்துக்கு எதிரானதா விடுதலை சிறுத்தைகள்.. திருமாவளவன் காட்டம்!
India US Trade Deal: ரூ.45 லட்சம் கோடி..! அமெரிக்காவிடமிருந்து இந்திய வாங்கும் பொருட்களின் மொத்த லிஸ்ட் - எது அதிகம்?
India US Trade Deal: ரூ.45 லட்சம் கோடி..! அமெரிக்காவிடமிருந்து இந்திய வாங்கும் பொருட்களின் மொத்த லிஸ்ட் - எது அதிகம்?
அடகொடுமையே..! 20 ரூபாய் வழக்கு.. செய்யாத தப்புக்கு 30 வருட ஜெயில்.. விடுதலையானதுமே நடந்த கொடுமை
அடகொடுமையே..! 20 ரூபாய் வழக்கு.. செய்யாத தப்புக்கு 30 வருட ஜெயில்.. விடுதலையானதுமே நடந்த கொடுமை
IND vs USA: பயம் காட்டிய அமெரிக்கா.. பாடம் புகட்டிய இந்தியா! வெற்றியுடன் தொடங்கிய டி20 உலகக்கோப்பை!
IND vs USA: பயம் காட்டிய அமெரிக்கா.. பாடம் புகட்டிய இந்தியா! வெற்றியுடன் தொடங்கிய டி20 உலகக்கோப்பை!
ABP Premium

வீடியோ

US Trade India | ஜவுளி முதல் நகைகள் வரை இந்தியப் பொருட்களுக்கு 0% வரி நண்பருக்காக இறங்கிய டிரம்ப்
MK Stalin Angry | ஆப்சென்ட் ஆன அமைச்சர் டோஸ் விட்ட முதல்வர் பரபரப்பு வீடியோ | Minister Gandhi | DMK
Gold Price Drop Reason | மீண்டும் ஏறும் தங்கம் தலைகீழாய் மாற வாய்ப்பு பிப்ரவரியில் TWIST |Trump
US India | இந்தியா - அமெரிக்கா டீல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: வன்னியர் சமூகத்துக்கு எதிரானதா விடுதலை சிறுத்தைகள்.. திருமாவளவன் காட்டம்!
Thirumavalavan: வன்னியர் சமூகத்துக்கு எதிரானதா விடுதலை சிறுத்தைகள்.. திருமாவளவன் காட்டம்!
India US Trade Deal: ரூ.45 லட்சம் கோடி..! அமெரிக்காவிடமிருந்து இந்திய வாங்கும் பொருட்களின் மொத்த லிஸ்ட் - எது அதிகம்?
India US Trade Deal: ரூ.45 லட்சம் கோடி..! அமெரிக்காவிடமிருந்து இந்திய வாங்கும் பொருட்களின் மொத்த லிஸ்ட் - எது அதிகம்?
அடகொடுமையே..! 20 ரூபாய் வழக்கு.. செய்யாத தப்புக்கு 30 வருட ஜெயில்.. விடுதலையானதுமே நடந்த கொடுமை
அடகொடுமையே..! 20 ரூபாய் வழக்கு.. செய்யாத தப்புக்கு 30 வருட ஜெயில்.. விடுதலையானதுமே நடந்த கொடுமை
IND vs USA: பயம் காட்டிய அமெரிக்கா.. பாடம் புகட்டிய இந்தியா! வெற்றியுடன் தொடங்கிய டி20 உலகக்கோப்பை!
IND vs USA: பயம் காட்டிய அமெரிக்கா.. பாடம் புகட்டிய இந்தியா! வெற்றியுடன் தொடங்கிய டி20 உலகக்கோப்பை!
MK Stalin Vs BJP ADMK: “ஓனரை மிஞ்சிய லேபராக இருக்கிறார் பழனிசாமி“; பாஜக, அதிமுகவை பொளந்து கட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்
“ஓனரை மிஞ்சிய லேபராக இருக்கிறார் பழனிசாமி“; பாஜக, அதிமுகவை பொளந்து கட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்
IND vs USA: ஆரம்பமே அதிர்ச்சி தந்த அமெரிக்கா! இமாலய இலக்கை குவிக்குமா இந்தியா?
IND vs USA: ஆரம்பமே அதிர்ச்சி தந்த அமெரிக்கா! இமாலய இலக்கை குவிக்குமா இந்தியா?
Congress: திமுக இல்லனா காங்கிரஸ் அவ்ளோதானா? தேர்தல் வரலாறுகள் சொல்வது என்ன? முழு அலசல்
Congress: திமுக இல்லனா காங்கிரஸ் அவ்ளோதானா? தேர்தல் வரலாறுகள் சொல்வது என்ன? முழு அலசல்
TTV vs Sasikala: சித்திக்கு எதிராக சீறும் டிடிவி.! சசிகலாவுடன் என்ன தான் பிரச்னை- ஓ...இது தான் காரணமா.?
சித்திக்கு எதிராக சீறும் டிடிவி.! சசிகலாவுடன் என்ன தான் பிரச்னை- ஓ...இது தான் காரணமா.?
Embed widget