Jallikattu: மலை அடிவாரத்தில் உலக தரத்தில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு மைதானம் - மதுரையில் பணிகள் விறு,விறு
கீழக்கரை கிராமத்தில் மலை அடிவாரத்தில் தயாராகும் இந்த ஜல்லிக்கட்டு அரங்கத்தின் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது!
— M.K.Stalin (@mkstalin) May 18, 2023
தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் செல்லும் என்பதை… pic.twitter.com/u4Saep26DK
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது. தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் செல்லும் என்பதை நிலைநாட்ட அரசு நடத்திய சட்டப் போராட்டத்துக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. அலங்காநல்லூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை நாம் கட்டி வருகிறோம். வரும் சனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம்.” எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தயாராகி வரும் ஜல்லிக்கட்டி அரங்கம் குறித்து நேரில் பார்வையிட்டோம்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு சட்டப்பேரவையிலே தென் மாவட்டங்களில் பாரம்பரியமாக பண்பாட்டு சின்னமாக இருக்கிற ஜல்லிக்கட்டை நினைவுபடுத்தும் வகையில் உலக தரத்தில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு மைதானம் வைக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் அலங்காநல்லூர் கீழக்கரையில் 16 ஏக்கர் நிலப்பரப்பில் 44 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. தரைத்தளம், முதல் தளம், வாடிவாசல், பார்வையாளர்கள் கேலரி, நிர்வாக அலுவலகம், ஜல்லிக்கட்டு காளைகள் சேகரிக்கும் இடம், அருங்காட்சியகம், பத்திரிகையாளர்கள் அறை, மாடுபிடி வீரர்கள் உடை மாற்றும் அறை, தங்கும் அறைகள் என உலகத்தரத்தில் அனைத்து வசதிகளும் இங்கு அமையவிருக்கிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த கட்டுமான பணிகள் வரும் டிசம்பர் மாதம் முடிவடையும் எனவும், இந்த கட்டுமான பணிகள் அனைத்தும் தென் மாவட்ட மக்கள் போற்றும் வகையில் தமிழக அரசு செய்திருக்கும் எனவும், தனிச்சிய முதல் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு வரும் முறையில் 3.5 கிலோமீட்டர் 10 மீட்டருக்கு புதிய தார் சாலை நெடுஞ்சாலை துறை மூலம் 22 கோடி செலவில் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தனர். கீழக்கரை கிராமத்தில் மலை அடிவாரத்தில் தாயாராகும் இந்த ஜல்லிக்கட்டு அரங்கத்தின் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Cable TV: மதுரையில் மத்திய அரசை கண்டித்து கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உண்ணாவிரத போராட்டம்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்