மேலும் அறிய
Advertisement
சர்வதேச மகளிர் தினம்: மதுரையில் வழங்கப்பட்ட பெண் வல்லுநர்களுக்கான எலா பட் விருதுகள்
”கல்விக்கு அதிகம் முக்கியம் செலுத்த வேண்டும், கல்வி மட்டுமே வாழ்க்கையை மாற்றும் சக்தி என்று” - ஆயி பூரணம் அம்மாள் பேச்சு.
எலா பட் விருது
அமெரிக்கன் கல்லூரியில் முதுகலை மற்றும் பொருளாதார ஆராய்ச்சி துறை சார்பாக சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண் வல்லுநர்களுக்கான எலா பட் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதுகலை மற்றும் ஆராய்ச்சிதுறை தலைவர் சி.முத்துராஜா நிகழ்வு பற்றி விளக்கினார். முதன்மை மற்றும் செயலாளர் சிறப்பு விருந்தினருக்கு கல்லூரி முதல்வர் M.தவமணி கிறிஸ்டோபர் விருதுகளை வழங்கினார்.
அரசுப் பள்ளிக்கு நிலங்கள் வழங்கி பாராட்டுகளைப் பெற்ற ஆயி பூரணம் அம்மாள் பேசும்போது.., கல்விக்கு அதிகம் முக்கியம் செலுத்த வேண்டும் என்றும், தொழில் துறையில் அதிகமாக முன்னேற்றம் அடைய வேண்டும், கல்வி மட்டுமே வாழ்க்கையை மாற்றும் சக்தி என்றும் கூறினார்.
ஹேம லதா எம், சமூக ஊடகம் செயல்பாட்டு நிர்வாகி பேசும் போது...,”நம்முடைய திறனை அதிகரிக்க பல்வேறு விதமான முயற்சிகளை கையாள வேண்டும். அவர்களது வாழ்க்கையின் அனுபவங்களையும் எடுத்துரைத்தார். கல்வி மட்டுமே நம்முடைய நிலையை மாற்றும் என்றும் மாணவர்களுக்கு தங்களது அனுபவங்களை கூறினார்
டாக்டர் யாழினி செல்வராஜ், எம்.டி. பொன்னி கருத்தரிப்பு ஆராய்ச்சி மையம் மதுரை பேசும் போது..., முந்தைய காலத்தில் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமாக இருந்தது, இன்றைய தினம் அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது. இன்றைய வாழ்க்கை முறை பற்றியும், உணவு முறை பற்றியும் இன்றைய இளைய தலைமுறையினர் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.
டாக்டர். பெலிண்டா பென்னட், சர்வதேச வளர்ச்சித்திட்ட அதிகாரி பேசும் போது..., எண்ணங்களேம்மனிதனின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும், சமூக கட்டமைப்பு என்ற பெயரில் நடக்கும் ஆணாதிக்கம் பற்றியும் ஜாதி போன்றவை அறவே அகற்றப்பட வேண்டும் என்றும், மாணவர்கள் தினமும் செய்தித்தாள் வாசிக்க வேண்டும் என்றும் நம்முடைய திறமைகளை மேம்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Ashwin: "எனக்கு கிடைத்த மரியாதை இதுதான்" முன்னாள் கிரிக்கெட் வீரரை அவமதித்தாரா அஸ்வின்?
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - TTF Vasan: மஞ்சள் வீரன் படத்துக்கு டிடிஎஃப் வாசன் சம்பளம் இத்தனை கோடியா? - ரசிகர்கள் அதிர்ச்சி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
வணிகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion