One Nation One Election: யார் சொன்னாலும் கேட்கமாட்டோம் - இன்று தாக்கலாகிறது ”ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா - மோடி அரசு
One Nation One Election: கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் நாடாளுமன்ற மக்களவையில், இன்று ”ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
One Nation One Election: கநாடாளுமன்ற மக்களவையில் ”ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா தாக்கல் செய்யப்பட்டாலும் நிறைவேற வாய்ப்புகள் இல்லை.
”ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், மக்களவையில் இன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த இந்த மசோதா வழி வகை செய்கிறது. மக்களவையின் இன்றைய பட்டியலிடப்பட்ட நிகழ்ச்சி நிரலில் ஒரே நேரத்தில் தேர்தல்கள் தொடர்பான அரசியலமைப்பு திருத்த மசோதா தாக்கல் செய்வதும் இடம்பெற்றுள்ளது. அரசியலமைப்பு (நூற்றி இருபத்தி ஒன்பதாவது திருத்தம்) மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் மேக்வால் மக்களவையில் அறிமுகப்படுத்த உள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதாவுக்கு பாரதிய ஜனதா கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
கூடுதல் மசோதாக்கள் என்ன?
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' ம்சோதா மட்டுமின்றி, யூனியன் பிரதேசங்களின் அரசு சட்டம், 1963ஐ திருத்துவதற்கான மசோதாவும் இன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும், டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேச அரசு சட்டம், 1991 மற்றும் ஜம்மு & காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம், 2019 தொடர்பான மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட உள்ளன. இந்த மசோதா டெல்லி, ஜம்மு&காஷ்மீர் மற்றும் புதுச்சேரியில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நோக்கங்களுக்காக தேர்தல்களை சீரமைக்க முயல்கிறது.
”ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா சொல்வது என்ன?
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை செப்டம்பர் மாதம் ஏற்றுக்கொண்டது. அதன்படி, இரண்டு கட்டங்களாக ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த குழு பரிந்துரைத்தது. முதல் கட்டமாக மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தவும், பொதுத் தேர்தல் முடிந்த 100 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தல்களை (பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகள்) நடத்தவும் பரிந்துரைத்தது. அனைத்து தேர்தல்களுக்கும் பொதுவான வாக்காளர் பட்டியல் இருக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி., ஜெய்ராம் ரமேஷ், இந்த மசோதா ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைப்பதாகக் கூறி, விரிவான ஆய்வுக்கு, பார்லிமென்ட் கூட்டுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அதேநேரம், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவை நிறைவேற்ற மக்களவையில் குறிப்பிடத்தக்க பெரும்பான்மை அவசியமாக உள்ளது. அதன்படி, இந்த மசோதா நிறைவேற வாய்ப்பில்லாத சூழலிலும், பாஜக 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவை தாக்கல் செய்ய தீவிரம் காட்டி வருகிறது.