மேலும் அறிய

சிவகங்கை: இலுப்பக்குடியில் பயிற்சியை முடித்த இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்

இந்தோ-திபத் எல்லை பாதுகாப்பு காவல் படையின் கூடுதல் இயக்குநர் சஞ்சீவ் ரெய்னா தலைமையில் பயிற்சி முடித்த வீரர்களை எல்லை பாதுகாப்பு படைக்கு அனுப்பும் விழா நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் இலுப்பக்குடியில் உள்ள இந்தோ-திபத் எல்லை பாதுகாப்பு பயிற்சி மையம் 2011ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 11 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து பயிற்சி முடித்த சுமார் 4500 மேற்பட்ட வீரர்கள் இதுவரை எல்லை பாதுகாப்பு படைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதன் ஒரு நிகழ்வாக 476 வது பயிற்சி நிறைவு விழாவில் சுமார் 44 வாரங்களாக கடினமான பயிற்சி முடித்த 525 வீரர்கள் தங்களது பயிற்சியினை நிறைவு செய்து எல்லை பாதுகாப்பு படைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சிவகங்கை: இலுப்பக்குடியில் பயிற்சியை முடித்த இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்

இந்தோ -  திபெத் எல்லை பாதுகாப்பு காவல் படையின்  ஐ.ஜி   சஞ்சீவ் ரெய்னா கூறுகையில், இந்தோ--திபெத் எல்லை காவல் படை 1962ஆம் ஆண்டு சீனப் போருக்குப் பின் இந்தியா, சீனா எல்லையில் பாதுகாவலுக்காக துவங்கப்பட்டது. முதலாவதாக 4 பட்டாளியன்களில் தொடங்கிய காவல் படை பின்னர் 56 பட்டாளியன்களாக அதிகரித்து தற்போது ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வீரர்களை கொண்டுள்ளது.  இந்திய சீன எல்லையான ஜம்மு காஷ்மீரின் காரோகரம் என்ற இடத்தில் தொடங்கி அருணாச்சல பிரதேசத்தின் ஜர்செல்லா வரைக்கும் 3 ஆயிரத்து 488 கி்மீ வரை செயல்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 9 ஆயிரம் அடி முதல் 18 ஆயிரத்து 700அடி வரையிலும் - 40 டிகிரி உள்ள சீதோசன நிலையிலும் தங்களது பணியினை ஆற்றி வருகின்றனர்.

சிவகங்கை: இலுப்பக்குடியில் பயிற்சியை முடித்த இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்

மேலும் செய்திகள் படிக்க - watch video | பால் குடம் சுமந்த பக்தர்களின் பாதங்களை குளிர்வித்த இஸ்லாமியர்கள் - மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வைரல் வீடியோ

எல்லை பாதுகாப்பு தவிர மற்ற பணிகளையும் செய்து வருகிறது. நக்சலைட்டுகளுக்கு எதிராகவும் ஜனாதிபதி மாளிகை மற்றும் தூதரகங்கள் போன்ற இடங்களிலும் தங்களது பணியை சிறப்பாக செய்து வருகின்றனர்” என்றார். முன்னதாக பயிற்சி காலத்தில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு விருதுகள் வழங்கிய ஐ.ஜி சஞ்சீவ் ரெய்னா பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து சிவகங்கை பயிற்சி மையத்தில் உள்ள வீரர்களின் அற்புதமான சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. சிவகங்கை இந்தோ-திபத் எல்லை பாதுகாப்பு படையின் டிஐஜி ரன்வீர் சிங், பயிற்சி துணை காவல் அதிகாரி பிரிதம் சிங்  உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - சிவகங்கை: சித்த மருத்துவத்திற்கு ஏற்ற தலம் கோவானூர் சுப்ரமணியர் கோயில்!

தலைப்பு செய்திகள்

மதுரை சொத்துவரி முறைகேடு: முன்னாள் மண்டலத்தலைவர் கணவர் சரவணன் கைது.. பழிவாங்குவதாக குற்றச்சாட்டு!
மதுரை சொத்துவரி முறைகேடு: முன்னாள் மண்டலத்தலைவர் கணவர் சரவணன் கைது.. பழிவாங்குவதாக குற்றச்சாட்டு!
OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !
OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
நவராத்திரி கொலுவில் தலைவரின் 230 படங்கள்... மதுரை ரசிகரின் பிரம்மாண்ட பக்தி!
நவராத்திரி கொலுவில் தலைவரின் 230 படங்கள்... மதுரை ரசிகரின் பிரம்மாண்ட பக்தி!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget