Nepal Flood: நேபாளத்தில் அதிசயம்..! 9 நாட்கள் கழித்து 2 பேர் உயிருடன் மீட்பு - சுரங்கங்களில் ஒலிக்கும் குரல்கள்
Nepal Flood Rescue: நேபாளத்தில் பெருவெள்ள பாதிப்பு ஏற்பட்டு 9 நாட்கள் ஆன நிலையில், இடிபாடுகளில் இருந்து இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

Nepal Flood Rescue: நேபாளத்தில் பெருவெள்ள பாதிப்பு ஏற்பட்டு 9 நாட்கள் ஆன நிலையில், இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
9 நாட்களுக்குப் பிறகு 2 பேர் உயிருடன் மீட்பு
நேபாள பெருவெள்ள பாதிப்புகளால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. சுமார் நான்காயிரம் பேர் காணமால் போயுள்ள நிலையில், அவர்களை தேடும் பணி இன்னும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இயற்கை பேரிடர் ஏற்பட்டு 9 நாட்களான பிறகு, திரிசூல் 3A ஹைட்ரோ பவர்ஸ்டேஷன் சுரங்கத்திலிருந்து 2 பேர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மீட்புக்குழுவினருக்கும் உத்வேகத்தையும் அளித்துள்ளது. இதனிடையே, சுரங்கத்திலிருந்து குரல்கள் கேட்பதாகவும், இதனால் மேலும் பலர் உள்ளே உயிருடன் இருக்கலாம் எனவும் மீட்புக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த சுரங்கப்பாதையில் சிக்கி இருப்போரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள பொறியாளர்களில் ஒருவரான ஸ்ரீராம் நெபுனே என்பவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், உயிருடன் மீட்கப்பட்டவர்கள் மெகானிக்கல் ஃபோர்மேன் சஞ்சய் ஷா, மெக்கானிக்கல் சூப்பர்வைசர் கபீர் மஹாராஜன் என குறிப்பிட்டுள்ளார். முதலில் சஞ்சயும் அவரை தொடர்ந்து கபீரும் மீட்கப்பட்டுள்ளனர்.
TWO MEN RESCUED ALIVE AFTER 9 DAYS IN NEPAL TUNNEL
— Subodh Kumar (@kumarsubodh_) September 4, 2026
Sanjay Sah and Kabir Maharjan were rescued alive from the Trishuli 3A hydropower tunnel, nine days after the August 26 flash flood.
Rescuers heard voices inside and are continuing the search for others who may remain trapped. pic.twitter.com/ttV3RKbdtd
பலர் மீட்கப்பட வாய்ப்பு?
பெருவெள்ளம் ஏற்பட்ட கடந்த ஆகஸ்ட் 26ம் தேதியிலிருந்து திரிசூல் ஹைட்ரோபவர் ஸ்டேஷன் நிலையத்தில் பணியாற்றி வந்த 40 பேரை காணவில்லை என கூறப்படுகிறது. இந்த சுரங்கப்பாதைக்குள் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஆழமாக செல்லும்போது, ஒன்றுக்கும் மேற்பட்ட குரல்கள் கேட்பதாக ஸ்ரீராம் நெபுனே தெரிவித்துள்ளார். ”அச்சம் கொள்ளாதீர்கள், உங்களை காப்பாற்றும் முயற்சியில் நாங்கள் இருக்கிறோம்” என மீட்பு குழுவினர் சொன்னபோது, அதற்கு மறுமுனையிலிருந்து பதிலும் கிடைத்தது. நேபாள ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையினர் அந்த சுரங்கப்பாதையில் தங்களது மீட்பு பணிகளை முடுக்கிவிட்டுளனர் என குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில், நாட்டில் உள்ள குறைந்தது ஆறு நீர்மின் நிலையங்களில் இருந்து 900-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் விவரங்கள் இன்னும் கணக்கில் வரவில்லை என கூறப்படுகிறது.
மீட்பு பணியில் நவீன உபகரணங்கள்
கரடுமுரடான இடிபாடுகள், மோசமான வானிலை மற்றும் நிலத்தடி வசதிகளை அணுகுவதில் உள்ள சிரமம் ஆகியவற்றால் மீட்புப் பணிகள் சிரமமானதாக இருந்தாலும், சுரங்கப்பாதை எல்லையை அடைவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நிலத்தடிப் பாதைகளைத் தடுத்துள்ள சேறு மற்றும் குப்பைகளை அகற்றுவதற்காக, கனரக இயந்திரங்களும் சிறப்பு உபகரணங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.இந்த நிகழ்வு நம்பிக்கையை தந்தாலும். மற்றொரு நீர்மின் திட்டத்தில் ஒரு மோசமான சம்பவம் பதிவாகியுள்ளது.
ரசுவா லாங்டாங் கோலா நீர்மின் திட்டத்தில், நேபாள ராணுவத்தின் தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் நடைபெற்று வரும் மீட்பு நடவடிக்கையின்போது, சுரங்கப்பாதைக்குள் சுமார் 150 மீட்டர் தூரம் முன்னேறிச் சென்று, உள்ளே இருந்து இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன..
Before You Go
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
ட்ரெண்டிங் செய்திகள்























