மேலும் அறிய

”தொழிலாளர்களின் நலன் கருதியே 12 மணிநேர வேலை நீட்டிப்பு சட்ட திருத்தம்” - தமிழிசை சௌந்தராஜன்

தமிழக பாஜக குறித்து நான் ஆளுநர் என்பதால் கருத்து கூற முடியாது - கூட்டணி விவகாரத்தில் என்னை இழுத்துவிடாதீர்கள் -  ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் பேட்டி.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்பாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

பி.ஜே.பி., மாநில தலைவர்கள் அதிகாரம் அற்றவர்கள் எனவும் டெல்லியில் உள்ள தலைமையே கூட்டணி முடிவு எடுக்கும் என்பது போல கூட்டணி கட்சியினர் கூறுவது குறித்த கேள்விக்கு

நான் ஆளுநர் என்பதால் அரசியல் கருத்து பேச முடியாது. பி.ஜே.பி., அ.தி.மு.க., கூட்டணி குறித்தான பேச்சில் என்னை இழுக்காதீர்கள் நான் தலைவராக இருந்த போது கூட்டணி கட்சித் தலைவர்களிடத்தில் எனக்கு நல்ல மரியாதை இருந்தது.

”தொழிலாளர்களின் நலன் கருதியே 12 மணிநேர வேலை நீட்டிப்பு சட்ட திருத்தம்” - தமிழிசை சௌந்தராஜன்

12 மணிநேர வேலை நீட்டிப்பு சட்ட திருத்தம் குறித்த கேள்விக்கு

12 மணிநேர வேலை மசோதா இது தொழிலாளர்களுக்கு அவர்களின் விருப்பப்படி 12 மணி நேரம் அல்லது  8 மணி நேரமாக தொழிலாளர்கள் சகோதரர்கள் முடிவு செய்ய வேண்டும் என்பது தான் இந்தச் சட்டத்தின் அடிப்படை. உலகம் முழுவதிலும் தொழிலாளர்கள் குறித்த ஆராய்ச்சி நடந்துள்ளது. அதில் அதிக நேரம் வேலை செய்து அதிக நேரம் ஓய்வு கொடுத்தால் பணியின் சக்தி அதிகரிக்கும் இதனால் குடும்ப வாழ்க்கை பலனுள்ளதாக இருக்கும் என்ற ஒரு கருத்து இருக்கிறது. பணியின் நேரம் மாற்றி அமைக்கப்படுகிறது தவிர பணி நேரம் அதிகரிக்கப்படவில்லை. 12 மணி நேரம் என்று அதிகரிக்கவில்லை பணியின் நேரம் அது தொழிலாளர்களின் விருப்பம் தான் இதனை தொழிலாளர்களின் விருப்பப்படி விட்டுவிடுவது நல்லது.

”தொழிலாளர்களின் நலன் கருதியே 12 மணிநேர வேலை நீட்டிப்பு சட்ட திருத்தம்” - தமிழிசை சௌந்தராஜன்

 இதனை அரசியலாக்கி போராட்டம் நடத்த வேண்டாம். இது அரசியல் கருத்து கிடையாது மருத்துவ ரீதியாக தொழில் செய்யும் பொழுது தொழிலாளர்கள் நான்கு நாட்கள் நன்கு வேலை செய்துவிட்டு மூன்று நாட்கள் ஓய்வு எடுத்தால் அதற்கு அவர்களின் பணியின் சக்தி அதிகரிக்கிறது ஓய்வு நேரம் அதிகரிக்கிறது பணி செய்வதற்கான ப்ரடிக்டிவிட்டி அதிகரிக்கிறது என அறிவியல் ரீதியாக சொல்கிறார்கள். இதனை  எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் பேச வேண்டும் பொத்தாம் பொதுவாக இதற்கு எதிராக பேசக்கூடாது. தொழிலாளர்களுக்கு நலம் பயக்கும் என்றால் இது நல்லது இது தொழிலாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அமையும் தொழிலாளர்கள் நன்கு வேலை செய்தால் முதலாளிகள் பயனடைவார்கள்,  முதலாளிகள் பயனடைந்தால் தொழிலாளர்களுக்கு நல்லது. பணி நேரம் அதிகரிக்கவில்லை பணிநேரம் முடிவு குறித்து தொழிலாளர்கள் விட்டு விடுங்கள். இந்த சட்டத்தை யாரும் தவறாக பயன்படுத்தக் கூடாது. இந்த சட்டம் கர்நாடக மற்றும் டெல்லியில் இந்த சட்டத்தை அமல்படுத்த தொடங்கியுள்ளனர்” என்றார்.

பின்னர் மதுரை விமான நிலையத்தில் பேட்டியளிக்கும் போது

ராமநாதபுரத்தில் படித்து வரும் எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையை பார்க்க முடியாத நிலை உள்ளது குறித்த கேள்விக்கு:

எய்ம்ஸ்சில் படிக்கிறோமா ராமநாதபுரத்தில் படிக்கிறோமா என்பதில்லை மனிதர்களைப் படிக்கிறோமா நோயைப் படிக்கிறோமா என்பதில் உள்ளது. எய்ம்ஸ்சோ  மருத்துவமனையும் செங்கலால் கட்டப்படுவது இல்லை மனிதர்களின் இதயத்தாலும் மனிதாபிமானத்தாலும் கட்டப்படுகிறது. எய்ம்ஸ் என்பது அதிகப்படியான நவீன தொழில்நுட்பத்தோடு உலக தரம் வாய்ந்தது. எல்லா விதத்திலும் உயர் தொழில்நுட்பத்தோடு கூடிய மருத்துவ வசதி நம் தமிழகத்திற்கு கிடைப்பது கிடைப்பது மிக்க மகிழ்ச்சியான ஒன்று. ஆரம்ப காலகட்டத்தில் எல்லாத்துலயும் ஒரு பிரச்னை இருக்கும். முதல் இரண்டு வருடங்கள் எய்ம்ஸ் தான் படிக்க வேண்டும் என்பதில்லை ஆரம்பகால படிப்பை எங்கு வேண்டுமென்றாலும் படிக்கலாம். எய்ம்ஸ் அப்படிதான். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடித்த பிறகு தான் எல்லோருக்கும் தெரியவரும் எல்லா விமர்சனங்களும் தவிடு பொடி ஆகிவிடும்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - நிதியமைச்சரின் ஆடியோ உண்மைதானா..? மத்திய அரசு விசாரிக்க வேண்டும்.. ஈபிஎஸ் பேட்டி !

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

MS Dhoni Retirement: தோனி ஐபிஎல்லில் இருந்து ஓய்வா? முக்கிய தகவலை பகிர்ந்த சிஎஸ்கே சி.இ.ஓ காசி விஸ்வநாதன்!
MS Dhoni Retirement: தோனி ஐபிஎல்லில் இருந்து ஓய்வா? முக்கிய தகவலை பகிர்ந்த சிஎஸ்கே சி.இ.ஓ காசி விஸ்வநாதன்!
Lok Sabha Election 5th Phase LIVE : மும்பையில் வாக்கு செலுத்திய தீபிகா - ரன்வீர் நட்சத்திர ஜோடி
Lok Sabha Election 5th Phase LIVE : மும்பையில் வாக்கு செலுத்திய தீபிகா - ரன்வீர் நட்சத்திர ஜோடி
Adulteration in Watermelon: தர்பூசணியில் அதிகரிக்கும் கலப்படம்! வீட்டிலேயே சோதிப்பது எப்படி தெரியுமா? அரசு விளக்கம்..
தர்பூசணியில் அதிகரிக்கும் கலப்படம்! வீட்டிலேயே சோதிப்பது எப்படி தெரியுமா? அரசு விளக்கம்..
“கண்ட ஜோக்கரின் பேச்சுக்களுக்கு நான் பதில் கூற மாட்டேன்” - கடுப்பான டிடிவி தினகரன் ஏன் தெரியுமா?
“கண்ட ஜோக்கரின் பேச்சுக்களுக்கு நான் பதில் கூற மாட்டேன்” - கடுப்பான டிடிவி தினகரன் ஏன் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Udhayanidhi Stalin Angry | பதவி கேட்ட நிர்வாகிகள்.. டோஸ் விட்ட உதயநிதி! பரபரக்கும் அன்பகம்!Baby Viral Video |  உனக்கெல்லாம் எதுக்கு குழந்தை? தாயின் விபரீத முடிவு..Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MS Dhoni Retirement: தோனி ஐபிஎல்லில் இருந்து ஓய்வா? முக்கிய தகவலை பகிர்ந்த சிஎஸ்கே சி.இ.ஓ காசி விஸ்வநாதன்!
MS Dhoni Retirement: தோனி ஐபிஎல்லில் இருந்து ஓய்வா? முக்கிய தகவலை பகிர்ந்த சிஎஸ்கே சி.இ.ஓ காசி விஸ்வநாதன்!
Lok Sabha Election 5th Phase LIVE : மும்பையில் வாக்கு செலுத்திய தீபிகா - ரன்வீர் நட்சத்திர ஜோடி
Lok Sabha Election 5th Phase LIVE : மும்பையில் வாக்கு செலுத்திய தீபிகா - ரன்வீர் நட்சத்திர ஜோடி
Adulteration in Watermelon: தர்பூசணியில் அதிகரிக்கும் கலப்படம்! வீட்டிலேயே சோதிப்பது எப்படி தெரியுமா? அரசு விளக்கம்..
தர்பூசணியில் அதிகரிக்கும் கலப்படம்! வீட்டிலேயே சோதிப்பது எப்படி தெரியுமா? அரசு விளக்கம்..
“கண்ட ஜோக்கரின் பேச்சுக்களுக்கு நான் பதில் கூற மாட்டேன்” - கடுப்பான டிடிவி தினகரன் ஏன் தெரியுமா?
“கண்ட ஜோக்கரின் பேச்சுக்களுக்கு நான் பதில் கூற மாட்டேன்” - கடுப்பான டிடிவி தினகரன் ஏன் தெரியுமா?
Liquid Nitrogen: பெங்களூரில் அதிர்ச்சி.. திரவ நைட்ரஜன் கலந்த பான் சாப்பிட்ட சிறுமி வயிற்றில் ஓட்டை!
பெங்களூரில் அதிர்ச்சி.. திரவ நைட்ரஜன் கலந்த பான் சாப்பிட்ட சிறுமி வயிற்றில் ஓட்டை!
Deepthi Jeevanji Video: 55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை.. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கத்தை தூக்கிய தீப்தி ஜீவன்ஜி!
55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை.. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கத்தை தூக்கிய தீப்தி ஜீவன்ஜி!
கடல் கடந்த காதல்... கொரிய இளைஞரை கரம்பிடித்த கரூர் இளம்பெண் - தமிழ் முறைப்படி திருமணம்
கடல் கடந்த காதல்... கொரிய இளைஞரை கரம்பிடித்த கரூர் இளம்பெண் - தமிழ் முறைப்படி திருமணம்
Fact Check: மெட்ரோ ரயில் விளம்பரம் -  மோடியுடன் சிங்கப்பூர் மெட்ரோ புகைப்படத்தை பயன்படுத்தியதா பாஜக?
மெட்ரோ ரயில் விளம்பரம் - மோடியுடன் சிங்கப்பூர் மெட்ரோ புகைப்படத்தை பயன்படுத்தியதா பாஜக?
Embed widget