மேலும் அறிய
Advertisement
எலுமிச்சம் பழங்கள் தரம்பிரிப்பு.. குட்கா பறிமுதல்.. தென் மாவட்டங்களில் தெரிந்துகொள்ளவேண்டிய செய்திகள் என்னென்ன?
நடுரோட்டில் வாளைச் சுழற்றி மக்களை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
1. ராமநாதபுரத்தில் இருந்து ராமேசுவரத்திற்கு கார் ஒன்றில் தடை செய்யப்பட்ட பான்மசாலா குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக நகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கார் ஒன்றில் பறிமுதல் செய்யப்பட்ட இந்த பான் மசாலா குட்கா பொருட்கள் ராமேசுவரத்தில் உள்ள கடைகளில் கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்காக கொண்டுவரப்பட்டதா அல்லது ஏஜெண்டுகள் மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. மானாமதுரை - ராமநாதபுரம் மின்சார ரயில் பாதை மற்றும் புதிய ஆண்டிபட்டி - தேனி அகல ரயில் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.
3. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சட்டமன்ற தேர்தலை நெல்லை மாவட்டத்தில் சிறப்பாக நடத்தியதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட தேசிய விருது பெற்று அலுவலகம் திரும்பிய நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு அரசு அதிகாரிகள் மலர்கொத்து வழங்கி கைதட்டி உற்சாக வரவேற்பளித்தனர்.
4. சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரியில் முதுநிலை மருத்துவ படிப்பில் 21 சீட்டிற்கான மாணவர் சேர்க்கை இக்கல்வி ஆண்டு முதல் துவங்கியுள்ளது.
5. சிவகங்கை மாவட்டம் கீழசெவல்பட்டியில் டாஸ்மாக் கடையை மூடக் கோரி போராடியவர்கள் மீது பதிவான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது.
6. தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே, எலுமிச்சம் பழத்தை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கடைகளிலும் விவசாய தொழிலாளர்கள், பழங்களை பேக் செய்து அதிகளவு வெளியூர்களுக்கு அனுப்பி வருகின்றனர்.
7. திண்டுக்கல் மாவட்டம் பழனி சுற்றுவட்டார பகுதியில் பருத்தி கட்டுப்பாட்டு முறைகள் குறித்து வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கினர்.
8. விருதுநகரில் தடை செய்யப்பட்ட 43 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளனர்.
9. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று (27.01.2022) பிற்பகல் 02.30 மணிக்கு, நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ப.மதுசூதன் ரெட்டி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
10. திருப்புவனம் அருகே நடுரோட்டில் வாளை சுழற்றி மக்களை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion