மேலும் அறிய
Advertisement
நீட்டில் தேர்வான ஏழை மாணவி.. கண்டுபிடிக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள்..தென் மாவட்ட செய்திகள் இதோ..
உள்ளாட்சி தேர்தலில் சீட் வழங்குவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க., மாவட்ட செயலர் வழக்கறிஞர் சிவபத்மநாதன் மீது தாக்குதல் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
1. நெல்லை மாவட்டம் நான்குநேரி பேருந்து நிலையத்தில் மூட்டையில் இருந்த 4 ஐம்பொன்னாலான சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. நான்குநேரி வருவாய் துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
2. நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பகுதியை சேர்ந்த பெண் தனது மூன்று வயது குழந்தையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
3. உள்ளாட்சி தேர்தல் வேட்புமனுத்தாக்கல் பாதுகாப்பு பணிக்க வந்த இடத்தில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி பசுமையை பேணி காத்த காவல் ஆய்வாளரின் செயல் பாராட்டை பெற்றது.
4. எல்லை தாண்டி வந்ததாக, இலங்கை வடமராட்சி கடல் பகுதியில் தமிழக மீன்பிடி படகுகளை சுற்றிவழைத்த உள்ளூர் வடமராட்சி மீனவர்களுடன் இணைந்து நடுக்கடலில் நள்ளிரவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டத்தை சேர்ந்த இரண்டு படகுகளுடன் 21 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
5. "பொதுத்தேர்வை கவனத்தில் கொண்டே பள்ளிகள் திறக்கப்படுவதாகவும் அனைத்து மாணவர்களும் அச்சமின்றி வர வேண்டும் என்றும் மாணவர்களை பாதுகாப்பது அரசின் கடமை எனவும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது" - என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.
6.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் தை அமாவாசையையொட்டி ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
7. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே குடும்ப பிரச்னை காரணமாக அண்ணனை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்ற தம்பி உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
8. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை விவசாய கூலித்தொழிலாளியின் மகள், கோச்சிங் வகுப்புக்களுக்கு செல்லாமல் மூன்றே மாதங்களில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்று எம்.பி.பி.எஸ் படிக்க தேர்வாகியுள்ளார்.
9. உள்ளாட்சி தேர்தலில் சீட் வழங்குவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க., மாவட்ட செயலர் வழக்கறிஞர் சிவபத்மநாதன் மீது தாக்குதல் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
10. மதுரை மாவட்டத்தில், நேற்று மட்டும் 365 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 89506 -ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 583 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 84224-ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1215 இருக்கிறது. இந்நிலையில் 4067 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion