இரவில் நடைபெற்ற மரியாதை நிகழ்வு.. சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது ராணுவ வீரர் ஜெயந்தின் உடல்..
வீரமரணம் அடைந்த மேஜர். ஜெயந்த் உடல் சொந்த ஊரான தேனி மாவட்ட ஜெயமங்கலத்திற்கு ராணுவ, போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்புடன் மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்லப்பட்டது.
அருணாசலபிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த லெப்ட்டினன்ட் கர்னல் ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்தின் உடல் தலைநகர் திசாப்பூரில் உள்ள இராணுவ மையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் விமானப்படை விமானம் மூலம் அவர்து சொந்த ஊரான (லெட்டினன்ட் கர்னல் ரெட்டி உடல் ஐதராபாத் கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து தெலுங்கானவில் உள்ள ஏடாட்ரி பகுதிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்படுகிறது. இதேபோல் மேஜர் ஜெயந்தின் உடல் அதே விமானம் மூலம் நேற்று இரவு மதுரை கொண்டுவரப்பட்டது.
அருணாச்சல பிரதேசம் மேற்கு காமேங் மாவட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் வீரமரணம் அடைந்த தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தை சேர்ந்த இராணுவ அதிகாரி மேஜர்.ஆ.ஜெயந்த் அவர்களின் உடலுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.#madurai pic.twitter.com/zJKxPcXElQ
— arunchinna (@arunreporter92) March 18, 2023
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்