ஹிந்தி கத்துக்கிட்டா, பக்கோடா பானிபூரிதான் விக்கணும் - கலாய்த்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்..
”அமித்ஷா - மோடி பேச்சுகளால் அச்சம் ஏற்படுகிறது. இவர்களின் கொள்கை முடிவால் சோவியத் ரஷ்யாபோல உடைந்து விடுமோ என்ற பயம் ஏற்படுகிறது” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கட்சி தொண்டர் சிலரை சந்திக்க சிவகங்கை வந்திருந்தார். அப்போது சிவகங்கையில் செய்தியாளர்களையும் சந்தித்து பேசினார்..,"தி.முக ஆட்சி அருமையாக நடைபெற்று வருகிறது. தி.மு.க ஆட்சிக்கு மத்திய அரசு பல இடையூறுகளை கொடுத்தாளும் அதையும் மீறி முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார். பல்வேறு நலத் திட்டங்களையும் செயல்படுத்துகிறார். குறிப்பாக பெண்களுக்கு இலவச பேருந்து பயணம். படிக்கும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட பல நல்ல திட்டங்களை அறிவித்துள்ளார்.
#JUSTIN | இந்தி மொழி பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தாது; பக்கோடா, பானிபூரி விற்க வேண்டுமானால் உதவலாம்
— ABP Nadu (@abpnadu) April 12, 2022
- ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் https://t.co/wupaoCQKa2 | #Congress #BJP #HindiLanguage pic.twitter.com/2BSkVlCicH






















