கேரளாவில் கனமழை: ரெட் அலர்ட் எச்சரிக்கை! தமிழ்நாட்டிலும் பருவமழை தீவிரம், என்ன நடக்கிறது?
ரெட் அலர்ட் - கன்னூர், காசர்கோடு. ஆரஞ்சு அலர்ட் - பாலக்காடு, எர்ணாகுளம், திரிச்சூர், இடுக்கி, கோட்டயம், பதனம்திட்டா. மஞ்சள் எச்சரிக்கை - திருவனந்தபுரம், கோல்லம், ஆலப்புலா.
தென்மேற்கு பருவமழை
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனிடையே கேரளாவில் ஏற்கனவே கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மலப்புரம், வயநாடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து நாளை மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கும்,16 ஆம் தேதி மலப்புரம், வயநாடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கும், 17 ஆம் தேதி மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களிலும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த சில நாட்களாக கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.
தீவிரமடையும் பருவமழை:
அதேபோல் தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காலம் இந்த ஆண்டு வழக்கத்தை காட்டிலும் முன்னதாக தொடங்கிவிட்டது. கோடை காலம் முடியும் முன்பே, பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இன்னும் பருவமழை தீவிரம் அடைவதற்கு நாட்கள் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அணைகள் நீர் இருப்பு போதிய அளவை எட்டிவிட்டது. இதற்கிடையே கேரளாவில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 5 மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ரெட் அலர்ட்:
கேரளாவில் இன்று பல மாவட்டங்களில் பரவலான மழை மற்றும் பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்தன மற்றும் வீடுகள் சேதமடைந்தன. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வுமையம் (IMD) வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி, காசர்கோடு, கண்ணூர், வயனாடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 24 மணி நேரத்திற்குள் 20 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், பாலக்காடு, எர்ணாகுளம், திருச்சூர், இடுக்கி, கோட்டையம் மற்றும் பதனம்திட்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வானிலை மையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
ஜூன் 17 ஆம் தேதி வரை, குறிப்பிட்ட இடங்களில் 20 செ.மீ. வரை கனமழை ஏற்படக்கூடும். ஜூன் 18 ஆம் தேதி, 7 முதல் 11 செ.மீ. வரையிலான மழை எதிர்பார்க்கப்படுகிறது. லட்சத்தீவிலும் ஜூன் 15 ஆம் தேதி கனமழை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இரண்டு வாரம் ஓய்வில் இருந்த தென்மேற்கு பருவமழை மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. கர்நாடக மாநிலத்திலும் பரவலான மழை பெய்து வருகிறது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஜூன் 17 வரை பரவலான மழை தொடரும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கர்நாடகாவின் கடலோர மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் அதிக மழை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட் - கன்னூர், காசர்கோடு. ஆரஞ்சு அலர்ட் - பாலக்காடு, எர்ணாகுளம், திரிச்சூர், இடுக்கி, கோட்டயம், பதனம்திட்டா. மஞ்சள் எச்சரிக்கை - திருவனந்தபுரம், கோல்லம், ஆலப்புலா.





















