மேலும் அறிய
Advertisement
அறநிலையத்துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய விவகாரம் - வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா மனுத்தாக்கல்
நான் எந்த ஒரு தனிநபரையும் குறிப்பிட்டு அவ்வாறு பேசவில்லை. அரசியல் உள்நோக்கத்தோடு என் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலுவையில் இருக்கும் இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்
பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த 2018 செப்டம்பர் 17ஆம் தேதி வேடசந்தூரில் இந்து முன்னணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போது இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் கோவில் நிலங்களை லஞ்சம் வாங்கிக்கொண்டு விற்பனை செய்கின்றனர் என்றும் பெண்களின் மரியாதையை குறைக்கும் வகையிலும் கொச்சைபடுத்தும் வகையிலும் பேசியதாக கூறி என் மீது இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அளித்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நான் எந்த ஒரு தனிநபரையும் குறிப்பிட்டு அவ்வாறு பேசவில்லை. அரசியல் உள்நோக்கத்தோடு என் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியுள்ளார்.இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
மதுரையில் கட்டிடம் இடிந்து காவலர் பலியான வழக்கு - கீழ்தளத்தில் வாடகைக்கு இருந்த நாகராஜன், சுப்பிரமணியன் ஆகியோர் மீதான வழக்குகளை ரத்து
மதுரையில் கட்டிடம் இடிந்து விழுந்து காவலர் பலியானது தொடர்பான வழக்கில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள மதுரை வில்லாபுரம் நாகராஜன், அவனியாபுரம் சுப்பிரமனியன் உள்ளிட்டோர் தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "மனுதாரர்கள் பழமையான கட்டிடத்தின் கீழ்தளத்தில் இருந்த கடையை வாடகைக்கு நடத்தி வந்துள்ளனர்.
வாடகைக்கு உள்ள இவர்களுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. மேலும் பழமையான கட்டிடத்தை அகற்ற வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் கொடுத்து அதன் உரிமையாளர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 2020 அக்டோபர் 22ல் கட்டிடம் இடிந்து விழுந்து காவலர் பலியானார் . இதைத்தொடர்ந்து கட்டட உரிமையாளர் மற்றும் கீழ்தளத்தில் வாடகைக்கு இருந்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஏற்புடையதல்ல.
துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்காக வழக்குத் தொடரப்பட்டு உள்ளது. மனுதாரர்களுக்கு எந்தவொரு குற்ற நோக்கமும் இல்லை. இவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. மனுதாரர்கள் எந்த குற்றமும் செய்யவில்லை. ஆகவே, நாகராஜன், சுப்பிரமணியன் ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுகிறது. பழமையான கட்டிடம் இடிந்து காவலர் பலியானது தொடர்பான பிரதான வழக்கு தொடர்ந்து நடைபெறும்" என உத்தரவிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion