மேலும் அறிய
கோவையில் இருந்து ராமநாதபுரம் சென்ற அரசு பேருந்து விபத்து: ஆரப்பாளையம் அருகே கவிழ்ந்ததால் பரபரப்பு
அரசு பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்து தொடர்பாக கரிமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து
Source : whats app
கோயம்புத்தூரில் இருந்து ராமநாதபுரம் சென்ற அரசுப் பேருந்து ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே வந்தபோது தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் பயணிகள் உள்ளிட்ட 30 பேர் காயம் அடைந்தனர்.
பேருந்து தலைகுப்பற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது
கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி புறப்பட்ட அரசு பேருந்து மதுரை அரசு ஆரப்பாளையம் பேருந்து நிலையத்துக்கு வந்தது. அப்போது வைகையாற்று கரையோரம் உள்ள சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரின் மீது மோதி பேருந்து தலைகுப்பற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்தில் பயணித்த 30க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு, காயம் ஏற்பட்டtது. இந்நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்படனர். மேலும் இந்த விபத்தில் வாகனத்தை ஒட்டி வந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த லக்ஷ்மணன் என்ற, அரசு பேருந்து ஓட்டுனருக்கும் காயம் ஏற்பட்ட நிலையில் அவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
வைகையாற்று கரையோர சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
இதனையடுத்து நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்பு காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து துறையினர் இணைந்து கயிறு மூலமாக மற்றொரு வாகனத்தின் உதவியுடன் பேருந்து மீட்கப்பட்டது. ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு வந்த அரசு பேருந்து திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால் வைகையாற்று கரையோர சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆரப்பாளையத்தை ஒட்டிய பகுதியில் அதிகளவிற்கான அரசு பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்லக்கூடிய நிலையில் தடுப்பு சுவர்களில் ஒளிரும் ஸ்டிக்கர் இல்லாததும், தெருவிளக்குகள் அமைக்கப்படாததால்., தொடர்ந்து இரவு நேரங்களில் அதிக அளவு விபத்து ஏற்படுகிறது. தற்போது வாகன ஓட்டிகள் காயம் அடையக் கூடிய நிலையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவமும் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
விளக்குகள் அமைக்க கோரிக்கை
அரசு பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்து தொடர்பாக கரிமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போல் மாநகராட்சி நிர்வாகம் ஆரப்பாளையம் பேருந்து நிறுத்தத்தை ஒட்டி உள்ள, வைகையாற்று சாலையில் தெருவிளக்குகளை அமைத்து., உரிய பாதுகாப்புகளை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















